பொது செய்தி

தமிழ்நாடு

'சிறப்பு பஸ்கள் சீராக இயக்கப்படும்'

Added : அக் 28, 2021
Share
Advertisement
சென்னை:''தீபாவளி பண்டிகையின்போது அனைத்து தட பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்களை சீராக இயக்கப்படும்' என போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலர் தயானந்த் கட்டாரியா தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரசு போக்குவரத்து கழகங்களில் டயர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இதனால் தீபாவளிக்கு தடையில்லா பஸ் சேவையை முழுமையாக வழங்க இயலாத நிலை

சென்னை:''தீபாவளி பண்டிகையின்போது அனைத்து தட பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்களை சீராக இயக்கப்படும்' என போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலர் தயானந்த் கட்டாரியா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரசு போக்குவரத்து கழகங்களில் டயர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இதனால் தீபாவளிக்கு தடையில்லா பஸ் சேவையை முழுமையாக வழங்க இயலாத நிலை ஏற்படும் என செய்தி வெளியாகி உள்ளது. புதிய டயர்கள் மற்றும் 'ரீட்ரேடிங்' பொருட்களின் இருப்பு தற்போது அதிகமாக இருப்பதால் தடையின்றி பஸ்களை இயக்க முடியும்.

கடந்த மே மாதம் வரை 15 ஆயிரத்து 997 புதிய டயர்கள் வாங்கப்பட்டுள்ளன. மேலும் 1000 டயர்கள் இந்த வாரம் போக்குவரத்து கழகங்களுக்கு செல்ல உள்ளது.எனவே தற்போதும் தீபாவளி பண்டிகையின்போதும் அனைத்து தட பஸ்கள்; சிறப்பு பஸ்களை சீராக இயக்க முடியும்.இவ்வாறு தயானந்த் கட்டாரியா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X