அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் பணியில் விஜய்

Added : அக் 28, 2021
Share
Advertisement
சென்னை:'விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் விஜய் மற்றும் இயக்க பெயரை பயன்படுத்தாமல் தேர்தலில் போட்டியிடலாம்' என பச்சைக் கொடி காட்டப்பட்டது. தமிழகம் முழுக்க விஜய் ரசிகர்கள் 129 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை சமீபத்தில் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அப்போது 'மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்து மக்களின் நன்மதிப்பை பெறுங்கள்' என அறிவுரை வழங்கி
 அரசியல் பணியில் விஜய்

சென்னை:'விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் விஜய் மற்றும் இயக்க பெயரை பயன்படுத்தாமல் தேர்தலில் போட்டியிடலாம்' என பச்சைக் கொடி காட்டப்பட்டது.
தமிழகம் முழுக்க விஜய் ரசிகர்கள் 129 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை சமீபத்தில் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அப்போது 'மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்து மக்களின் நன்மதிப்பை பெறுங்கள்' என அறிவுரை வழங்கி உள்ளார்.

மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில் 'தமிழக மக்களின் அடிப்படை பிரச்னையை தீர்க்க அதை மத்திய - மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு விஜய் கூறியிருக்கிறார்' என்றார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்க உள்ளது. அடுத்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையில் மக்கள் இயக்கம் களமிறங்கினாலும் ஆச்சரியம் இல்லை' என்கின்றனர் அதன் நிர்வாகிகள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X