பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை உஷ்ஷ்ஷ்... ஈ.வெ.ரா., படமும் ஜாதி சங்க கூட்டமும்!

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (124)
Share
Advertisement
நாயுடு சங்கங்கள் கூட்டமைப்பு, வரும் 31ல், இன ஒற்றுமைக்கான கலந்தாய்வு கருத்தரங்கை சென்னையில் நடத்த உள்ளது.பிரிந்து கிடக்கிற நாயுடு சங்கங்களை ஒருங்கிணைத்து, அரசியல் கட்சியை துவக்கும் வகையில், இந்த கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கருத்தரங்க அழைப்பிதழில், இனப் பெருமைக்குரிய செம்மல்கள் என்ற தலைப்பில் ஈ.வெ.ராமசாமி, கட்டபொம்மன், திருமலை நாயக்கர், கிருஷ்ண

நாயுடு சங்கங்கள் கூட்டமைப்பு, வரும் 31ல், இன ஒற்றுமைக்கான கலந்தாய்வு கருத்தரங்கை சென்னையில் நடத்த உள்ளது.latest tamil newsபிரிந்து கிடக்கிற நாயுடு சங்கங்களை ஒருங்கிணைத்து, அரசியல் கட்சியை துவக்கும் வகையில், இந்த கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கருத்தரங்க அழைப்பிதழில், இனப் பெருமைக்குரிய செம்மல்கள் என்ற தலைப்பில் ஈ.வெ.ராமசாமி, கட்டபொம்மன், திருமலை நாயக்கர், கிருஷ்ண தேவராயர், ராணி மங்கம்மாள் உள்ளிட்டோரின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

திராவிட இயக்கங்கள், ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட தலைவராக ஈ.வெ.ராமசாமியை கருதும் நிலையில், அவரை ஜாதி வட்டத்திற்குள் அடைக்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால், ஈ.வெ.ராமசாமியின் படத்தை நீக்கி, கருத்தரங்கம் நடத்த விழா குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆரம்பமே சர்ச்சையாக துவங்குவதால், அரசியல் கட்சி துவக்கம் எல்லாம் சாத்தியப்படுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


அடுத்த வாரிசு பராக் பராக்!


தமிழக அரசியல் களத்தில் வாரிசுகள் இறங்குவது சகஜமாகிவிட்டது. முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்; ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மகன் துரை என, பலரும் வரிசை கட்டி வந்துள்ளனர்.

இந்த வரிசையில், வேந்தர் பெயரிலான கட்சி நிறுவனரின் டாக்டர் மகனும் அரசியல் களத்தில் குதிக்கப் போகிறாராம். குரு பூஜைக்கான போஸ்டர்களில், வாரிசு படமும், தலைவருக்கு நிகராக இடம் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே தான் உருவாக்கிய மருத்துவமனையை மகனிடம் ஒப்படைத்தவர், தான் உருவாக்கிய கட்சியையும் ஒப்படைக்க தயாராகி விட்டாராம். ராமநாதபுரத்தில், 3 கோடி ரூபாயில் அன்னதான கூட்டம் கட்டப்படுகிறது. இதன் திறப்பு விழாவில், கட்சி நிர்வாகம், மகனுக்கு மாறும் அறிவிப்பு வெளியாகுமாம்.


அதிகாரிகள் விருந்தால் நொந்து போன நிருபர்கள்!


latest tamil newsதமிழக அரசு, 200 கோடி ரூபாயில், 'இல்லம் தேடி கல்வி திட்டம்' என்ற பெயரில், மாணவர்களின் வசிப்பிடங்களுக்கே சென்று, 'டியூஷன்' எடுக்கும் திட்டத்தை நேற்று துவக்கி உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், இதன் செயல் திட்டங்கள் குறித்து நிருபர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி, சில தினங்களுக்கு முன், தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற நிருபர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. பஜ்ஜி, வடை, சிக்கன் பக்கோடா, வெஜ் சூப், சாண்ட்விச், போண்டா என, சகல வகைகளும் 'புபே' முறையில் வழங்கப்பட்டன.

இவற்றை ருசித்து அலுவலகம் திரும்பிய நிருபர்கள், உடல் உபாதையால் பாதிக்கப்பட்டனர். பலர் அரை நாள் விடுப்புடன் வீடு திரும்பினர். 'பெரிய பட்ஜெட் திட்டம் என்பதால், 'தரமாக' கவனிப்பதாக நினைத்து, இப்படி நம்மளை அவஸ்தை பட வச்சு, திட்ட தொடக்கத்துக்கு, அதிகாரிங்க திருஷ்டி சுத்தி போட்டுட்டாங்களோ' என, நிருபர்கள் நொந்து போயினர்!

Advertisement
வாசகர் கருத்து (124)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
04-நவ-202114:06:23 IST Report Abuse
pradeesh parthasarathy தேவையற்ற திட்டம் இது ... இந்த பணத்தை கொண்டு இருக்கும் பள்ளிக்கூடங்களை நன்கு பராமரித்தாலே போதும் ...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-நவ-202115:30:48 IST Report Abuse
Bhaskaran Tamilnaattil orusaathiyinar mahaathmaagaanthi ar k shanmugam chettiyaar ponravargalai thangal saathi thalaivargal enru poster pottu vilaakondaadinaargal
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
29-அக்-202113:57:54 IST Report Abuse
Vena Suna ஈவேரா சொத்தை அண்ணா ஆட்டையைப் போட நினைத்தார் ஆனால் ஈவேரா உஷாராகி விட்டார் அவர் மணியம்மை என்ற சின்ன பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு சொத்துக்களை அந்த பெண் மீது எழுதி வைத்தார் இதனால் மனமுடைந்து விரக்தியடைந்த அண்ணா பெரியாருடன் சண்டைபோட்டு திராவிட கழகத்தை விட்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார் இதனால் உஷாராக வீரமணி திராவிட கழகத்தில் புகுந்து பொறுமையாக காத்து இருந்து பெரியார் போகும் வரை நல்ல வேஷம் போட்டு பிறகு எல்லா சொத்துக்களையும் ஆட்டையை போட்டார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X