அரசியல் செய்தி

தமிழ்நாடு

துரைக்கு ஆதரவு கடிதம் தராத ம.தி.மு.க., நிர்வாகிகள் நீக்கம்?

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை-ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரைக்கு ஆதரவு கடிதம் தராத நிர்வாகிகளின் கட்சி பதவிகளை பறிக்கும் படலம், அக்கட்சியில் தொடர்கிறது.முதல் கட்டமாக, நாமக்கல் மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மகன் துரைக்கு, சமீபத்தில், தலைமை நிலைய செயலர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு ஆதரவு தெரிவித்து, மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்களிடம்

சென்னை-ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரைக்கு ஆதரவு கடிதம் தராத நிர்வாகிகளின் கட்சி பதவிகளை பறிக்கும் படலம், அக்கட்சியில் தொடர்கிறது.



latest tamil news


முதல் கட்டமாக, நாமக்கல் மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மகன் துரைக்கு, சமீபத்தில், தலைமை நிலைய செயலர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு ஆதரவு தெரிவித்து, மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்களிடம் கடிதம் கேட்கப்படுகிறது.கடந்த 20ம் தேதி நடந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தை, 18 நிர்வாகிகள் புறக்கணித்தனர். அவர்களிடமும் துரைக்கு ஆதரவு கடிதம் கேட்டு, நெருக்கடி அளிக்கப்படுகிறது.

ம.தி.மு.க., உயர்நிலை குழு உறுப்பினரும், நாமக்கல் மாவட்டச் செயலருமான டி.என்.குருசாமி, 20ம் தேதி கூட்டத்திற்கு வரவில்லை.இதனால், நேற்று அவரிடமிருந்த மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரிடம் உயர்நிலை குழு உறுப்பினர் பதவி மட்டும் உள்ளது.இது குறித்து, வைகோ வெளியிட்ட அறிக்கையில், 'நாமக்கல் மாவட்டம், கட்சி நிர்வாக வசதிக்காக, நாமக்கல் கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.'கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக எஸ்.சேகர், மேற்கு மாவட்ட பொறுப்பாளராக கே.கே.கணேசன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்' என தெரிவித்துள்ளார்.குருசாமியின் பதவி பறிக்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதால், அம்மாவட்ட ம.தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரிடம், துரைக்கு ஆதரவாக கடிதம் கேட்டு நெருக்கடி தரப்பட்டுள்ளது. ஆனால், அவர் தரப்பில் ஆதரவு கடிதம் தர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் ராஜினாமா கடிதம் கொடுக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil news


எனவே, விரைவில் அவரது பதவியும் பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது.துரைக்கு ஆதரவு கடிதம் தராமல் இழுத்தடிக்கும் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் பதவி பறிப்பு தொடரும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
28-அக்-202112:21:51 IST Report Abuse
Kumar இந்த கட்சி இல்லாத கட்சி என்பதை விட,வைகோவின் வியாபார தந்திரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தனக்குப் பிறகு தன்மகனை இவர் ஏன் முன்நிறுத்துகிறார்? தன் ஜாதி வாக்குகளும், தான் மாறிய மதவாக்குகளையும் இணைக்கவே இவரின் இந்த முடிவு. கட்சி பணம், சொத்துக்கள் வேறு யாருக்கும் சென்றுவிடாமல் தடுக்க முடியும். சென்னையில் பெரியாரை முன்நிறுத்தி இவரின் ஜாதி அரசியல் அவர் ஜாதிகாரர்களால் ஏற்கனவே தொடங்கிவிட்டது. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
28-அக்-202111:40:31 IST Report Abuse
சீனி லெட்டர் பேடிலேயே கட்சியும் நடத்தி, நிர்வாகிகளையும் சேர்த்து, ஆட்சியும் நடத்துவார் வைகோ... ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் டாஸ்மாக் திராவிடன், 30வருடம் முன் இவரு எதுக்கு கட்டுமரத்துல இருந்து குதிச்சு கள்ளத்தோணியில போனாருன்னு மறந்துவிட்டன் என்பது உண்மை. சீமான், கமல் உட்பட அடுத்தடுத்து எல்லா கட்சிக்கும் வாரிசுகள் தான் வரும், மக்களும் டாஸ்மாக் மயக்கத்தில் தயாராகிவிட்டார்கள் என்பது தான் உண்மை.
Rate this:
Cancel
28-அக்-202111:03:19 IST Report Abuse
Zahir Hussain PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X