பொது செய்தி

தமிழ்நாடு

சுயசரிதை தான் ஆவணம்; வ.உ.சி., பேத்தி திட்டவட்டம்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.,யின், 150வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, அவர் படித்ததாக கூறப்படும் நெல்லை இந்து பள்ளியின் மேம்பாட்டுக்கு, தமிழக அரசு, 1.05 கோடி ரூபாய் அளிப்பதாக அறிவித்தது.இந்நிலையில், வ.உ.சி., யின் சுயசரிதை தவிர, அவர் அந்த பள்ளியில் படித்ததற்கான ஆவணங்கள் எதுவுமில்லை என, அப்பள்ளி நிர்வாகம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவலாக குறிப்பிட, அது

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.,யின், 150வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, அவர் படித்ததாக கூறப்படும் நெல்லை இந்து பள்ளியின் மேம்பாட்டுக்கு, தமிழக அரசு, 1.05 கோடி ரூபாய் அளிப்பதாக அறிவித்தது.



latest tamil news


இந்நிலையில், வ.உ.சி., யின் சுயசரிதை தவிர, அவர் அந்த பள்ளியில் படித்ததற்கான ஆவணங்கள் எதுவுமில்லை என, அப்பள்ளி நிர்வாகம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவலாக குறிப்பிட, அது சர்ச்சையானது.

இது குறித்து வ.உ.சி., மகன் வாலேஸ்வரனின் மகளான மரகத மீனாட்சி ராஜா கூறியதாவது:வ.உ.சி., தன் சுயசரிதையில், 'செல்வம் மிகுந்த திருநெல்வேலியின் அருகிலுள்ள அழகுறும் இந்துப் பெரியகலா சாலையைப் பேணியடைந்து சின்னாட் கற்று' என்று தெளிவுபட கூறியிருக்கிறார். அதாவது, நெல்லை இந்து பள்ளியில் படித்ததைத்தான் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்.அந்த பள்ளியில், அவர் படித்தார் என்பதற்கு, அதை விட பெரிய ஆதாரம் எதுவும் தேவையில்லை. வ.உ.சி., படித்தது, 130 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம். 100 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்கள் யாரிடமும் இருக்க வாய்ப்பில்லை.


latest tamil news


இந்த அடிப்படையில் தான், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பள்ளி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் பள்ளியில் இல்லை என பதில் அளித்திருக்கிறது.அதை வைத்து, வ.உ.சி., அந்த பள்ளியில் படித்தாரா என்பது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்தி, சிலர் சர்ச்சையை கிளப்புவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
28-அக்-202111:42:44 IST Report Abuse
raja வேற யாரு... எல்லாம் நம்ப ...கோஷ்டிகள்தான் சந்தேகம் எழுப்புவது....
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
28-அக்-202106:48:16 IST Report Abuse
 N.Purushothaman சர்ச்சையை கிளப்புவது யாரு ? பாவாடை க்ருப்பு தான்.....வந்தேறி மதத்தை தழுவியவர்களை கட்டுக்குள் வைக்காவிட்டால் அது தேச நலனுக்கே பேராபத்தாக முடியும் .....
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
28-அக்-202103:58:29 IST Report Abuse
Sankar Ramu நல்ல வேலை. வ உ சி யின் பிறப்பு சான்றிதழ் இல்லை அதனால் அப்படி ஒருவர் பிறக்கவேயில்லைன்னு சொன்னாலும் ஆச்சரியபட வேண்டியதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X