சீனாவின் புதிய நில எல்லை சட்டம்; மத்திய அரசு கண்டனம்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி : சீன அரசின் ஒருதலைப்பட்சமான புதிய நில எல்லை சட்டத்துக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.''இந்த சட்டம் எல்லை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த எல்லை பிரச்னையில் தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது கவலைக்குரிய விஷயம்,'' என, வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்தார். எல்லை


புதுடில்லி : சீன அரசின் ஒருதலைப்பட்சமான புதிய நில எல்லை சட்டத்துக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.latest tamil news''இந்த சட்டம் எல்லை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த எல்லை பிரச்னையில் தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது கவலைக்குரிய விஷயம்,'' என, வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்தார். எல்லை பகுதிகளில் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தும் விதமாக புதிய நில எல்லை சட்டம், சீன பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேறியது. இந்த சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.இந்த புதிய சட்டம் குறித்து, மத்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறியதாவது:latest tamil news


புதிய நில எல்லை சட்டத்தை காரணம் காட்டி, இந்தியா - -சீனா எல்லை பகுதிகளில் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றக்கூடிய நடவடிக்கைகளை சீனா தவிர்க்கும் என்று எதிர்பார்க்கிறோம்.அத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள், எல்லையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதில் இரு நாடுகளும் ஏற்கனவே எட்டியுள்ள உடன்படிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
28-அக்-202114:51:45 IST Report Abuse
மிளிர்வன் டாய், சப்ப.. மின்னாடி எல்லாம் 1962 மறந்துடுச்சா'ன்னு உதார் உடுவியே.. இப்போ எங்கே அந்த சத்தத்தையே காணோம்..? இப்போ கண்டி நீ வாலாட்டி பாரு.. வொன்ன பிரிச்சி மேய்ஞ்சுடுவாய்ங்க அல்லாருஞ்சேர்ந்து.. நீ வொலகமுச்சூடும் வட்டிக்கு வுட்டுக்குற பணம் அம்போ'ன்னு போயிடும்.. சாக்கு எப்போ எப்போ'ன்னு காத்திக்கிட்டிருக்காய்ங்க அம்புட்டு பேரும்.. பக்கி'யும் சேர்ந்து காணாம பூடுவான்..
Rate this:
Cancel
selvaraju - KUALA LUMPUR,மலேஷியா
28-அக்-202113:20:57 IST Report Abuse
selvaraju சீன அரசின் ஒருதலைப்பட்சமான புதிய நில எல்லை சட்டத்துக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. why this go and fight with China. why you all make people fool ?
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
28-அக்-202108:45:54 IST Report Abuse
RajanRajan இந்த அழிவை தேடும் சீனனின் சட்டம் உலக நாடுகளின் ஒருங்ணைந்த நடவடிக்கைக்கு வழிவகுக்கும். இந்த கூட்டு நடவடிக்கையில் இதில் நம் உறுதியான பங்களிப்பு சீனாவுக்கும் பக்கிகளுக்கும் மிக பெரிய தாக்கத்தை உருவாக்க வேண்டும். ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஹிந்த் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X