கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வீட்டுவசதி செயல் திட்டம்; ஐகோர்ட் யோசனை

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு, வீட்டுவசதி ஏற்படுத்திக் கொடுக்க, விரிவான செயல் திட்டம் வகுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.இந்திய குடியரசு கட்சியின் மாநில செயல் தலைவர் கருமலை தாக்கல் செய்த மனுவில், 'சேலம் மாவட்டம் தாத்தையாம்பட்டி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி, வீடு இல்லாத ஏழைகளுக்கு ஒதுக்க

சென்னை: தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு, வீட்டுவசதி ஏற்படுத்திக் கொடுக்க, விரிவான செயல் திட்டம் வகுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.



latest tamil news


இந்திய குடியரசு கட்சியின் மாநில செயல் தலைவர் கருமலை தாக்கல் செய்த மனுவில், 'சேலம் மாவட்டம் தாத்தையாம்பட்டி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி, வீடு இல்லாத ஏழைகளுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் பிளீடர் முத்துகுமார் ஆஜராகி, ''பள்ளி கட்டடத்துக்கு அந்த நிலத்தை ஒதுக்கும்படி, கலெக்டருக்கு, தாசில்தார் பரிந்துரைத்துள்ளார்,'' என்றார்.


latest tamil news




இதையடுத்து, வீட்டுமனை ஒதுக்கக் கோரி, புதிதாக கலெக்டருக்கு மனு அனுப்பும்படி, மனுதாரருக்கு, முதல் பெஞ்ச் அறிவுறுத்தியது. தமிழகம் பல துறைகளின் வளர்ச்சியில் முன்னணியாக திகழ்வதாகவும், முன்மாதிரி திட்டம் வகுத்தால், அதை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் எனவும், முதல் பெஞ்ச் தெரிவித்தது.வீடுகள் இல்லாத ஏழை எளியவர்களுக்கு நிலம் அல்லது வீடு வழங்குவது தொடர்பாக, விரிவான செயல் திட்டம் வகுக்கும்படியும், முதல் பெஞ்ச் அறிவுறுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
28-அக்-202110:38:28 IST Report Abuse
S.Baliah Seer வர வர எதற்கு நீதிமன்றம் போகவேண்டும் என்ற வரமுறையில்லாமல் போய்விட்டது. அரசு புறம்போக்கு நிலத்தை என்ன செய்யவேண்டும் என்பது அரசின் வேலை. அதை அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம் என்று அரசுக்கு யோசனை சொல்வதை விட்டுவிட்டு தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிப்பது மட்டுமே நீதிமன்றங்களின் வேலை.
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
28-அக்-202104:28:28 IST Report Abuse
Siva Kumar ஆக இந்து ஏழை குடிமக்களுக்கு என்று சொல்லி கோயில் நிலங்களை வீடு கட்டி கொடுக்க கொள்ளை அடிக்க நடவடிக்கை எடுக்கலாம்.
Rate this:
Cancel
28-அக்-202104:16:23 IST Report Abuse
அப்புசாமி தேவையில்லாத விஷயம். அல்லாருக்கும் வூடு திட்டத்தில் மோடி ஐயா எல்லோருக்கும் வீடு 2022 க்குள் குடுத்திடுவாரு. ஏ ஹமாரா சங்கல்ப் ஹைன்னு சொன்னாரே... எலக்ஷன் வாக்குறுதியாச்சே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X