பொது செய்தி

தமிழ்நாடு

25 நாட்களில் ஆவினுக்கு ரூ 23 கோடி லாபம்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை-தீபாவளி கொண்டாட்டம் எதிரொலியாக, ஆவின் நிறுவனத்திற்கு, 25 நாட்களில் 22.6 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும், 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 26 லட்சம் லிட்டர், பால் பாக்கெட்டுகளாக மாற்றி விற்கப்படுகிறது. எஞ்சிய பாலில், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், ஐஸ்கிரீம், இனிப்புகள், சாக்லேட் உள்ளிட்டவை தயாரித்து

சென்னை-தீபாவளி கொண்டாட்டம் எதிரொலியாக, ஆவின் நிறுவனத்திற்கு, 25 நாட்களில் 22.6 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.



latest tamil news


ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும், 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 26 லட்சம் லிட்டர், பால் பாக்கெட்டுகளாக மாற்றி விற்கப்படுகிறது. எஞ்சிய பாலில், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், ஐஸ்கிரீம், இனிப்புகள், சாக்லேட் உள்ளிட்டவை தயாரித்து விற்கப்படுகிறது.தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஆவின் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதால், விற்பனை மெல்ல சூடுபிடிக்க துவங்கியுள்ளது. ஊழியர்களுக்கு வழங்குவதற்காக, 3.01 கோடி ரூபாய் மதிப்பிலான, 70 டன் இனிப்புகளை போக்குவரத்து துறை கொள்முதல் செய்துள்ளது.


latest tamil news


இதுமட்டுமின்றி, 8,282 கிலோ சிறப்பு இனிப்புகள், 76.9 லட்சம் ரூபாய்க்கும்; 56 ஆயிரத்து 764 கிலோ வழக்கமான இனிப்புகள், 2.34 கோடி ரூபாய்க்கும்; 2.55 லட்சம் லிட்டர் நெய், 12.1 கோடி ரூபாய்க்கும்; 7,951 கிலோ பாதாம் மிக்ஸ் பவுடர், 30.8 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது.சிறப்பு ஆர்டர்கள் வாயிலாக, 77 ஆயிரத்து 475 கிலோ இனிப்புகள், 3.98 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இப்பொருட்களின் விற்பனை வாயிலாக, ஆவின் நிறுவனத்திற்கு, 25 நாட்களில் 22.6 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
28-அக்-202113:25:10 IST Report Abuse
Chakkaravarthi Sk இந்த நல்ல செடியை தமிழ்நாட்டு மக்கள் கேட்டு அனந்தப்படக்கூடாதென்று தானோ என்னவோ போக்குவரத்து துரையின் மந்திரி தனியாருக்கு தாரை வர்க்கமுடிவெடுத்தாரோ என்னமோ? நல்ல வீடியோ மூஞ்சி அரசு நிர்வாகம் வீணாய்ப்போன நிர்வாகம் இந்த லட்சணத்தில் தானே கம்யூனிஸ்ட்கள் பொதுத்துறை நிறுவனங்கள் காப்பாற்ற போராடுகிறார்கள் அடெங்கப்பாயா?
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
28-அக்-202111:29:49 IST Report Abuse
pattikkaattaan சென்ற வருடம் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஒன்றரை கோடி ரூபாய் இனிப்புகளை வீட்டுக்கு அள்ளிட்டு போய்விட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டதே ... உண்மைங்களா ?..
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
28-அக்-202110:17:11 IST Report Abuse
duruvasar ஜெபத்தின் மகிமையே மகிமை. ஜெபமே மந்திரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X