பொது செய்தி

இந்தியா

மருந்து தொழிலில் முதலீடு; முதலீட்டாளர்களுக்கு மத்திய அமைச்சர் மாண்டவியா அழைப்பு

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : “மருந்து தொழிலின் மையமாக இந்தியாவை மாற்ற, முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும்,” என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அழைப்பு விடுத்துள்ளார்.டில்லியில் நேற்று, 'ஆப்பர்ச்சுனிட்டீஸ் அண்டு பார்ட்னர்ஷிப்ஸ் இன் பார்மா அண்டு மெடிக்கல் டிவைசஸ்' எனப்படும், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் தயாரிப்பு தொடர்பான முதலீட்டாளர்கள் மாநாடு


புதுடில்லி : “மருந்து தொழிலின் மையமாக இந்தியாவை மாற்ற, முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும்,” என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அழைப்பு விடுத்துள்ளார்.



latest tamil news



டில்லியில் நேற்று, 'ஆப்பர்ச்சுனிட்டீஸ் அண்டு பார்ட்னர்ஷிப்ஸ் இன் பார்மா அண்டு மெடிக்கல் டிவைசஸ்' எனப்படும், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் தயாரிப்பு தொடர்பான முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. 'ஆன்லைன்' வாயிலாக நடந்த இந்த மாநாட்டில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:முதலீட்டாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறுவதையே நானும் இப்போது கூறுகிறேன். இந்தியாவுக்கு வந்து தொழிற்சாலைகளை கட்டமைத்து தயாரியுங்கள். முதலீட்டாளர்களுக்கு இதன் வாயிலாக அழைப்பு விடுக்கிறேன்.உங்கள் சொந்த நாடுகளில் இருப்பதை போல், பாதுகாப்பான முதலீட்டு சூழலை, இந்தியாவும் உங்களுக்கு வழங்கும். நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.


latest tamil news



இதை பயன்படுத்தி சர்வதேச மருந்து தொழில் நிறுவனங்கள் பயனடைய வேண்டும். இந்தியாவில் அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும், சமமாகவே நடத்தப்படுவர். மருந்து தொழிலின் மையமாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். இதை நிறைவேற்ற, அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.நாட்டில், மூன்று பெரிய மருந்து தயாரிக்கும் பூங்காக்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-அக்-202116:59:46 IST Report Abuse
அப்புசாமி மருந்து கம்பெனிக்காரங்கோ அவிங்களுக்கு ஆதாயம் இருந்தாதான் இங்கே வந்து தொழில் தொடங்குவாங்கோ. நீங்க கேட்டுக் கொண்டால் வந்து தொடங்க மாட்டாங்கோ....
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
28-அக்-202109:49:44 IST Report Abuse
பாமரன் போன வருஷம் இந்தியாவின் பெரிய கார்பொரேட் ஒன்று (ரிலையன்ஸுன்னு சொல்லப்பிடாது..🤪) மருந்து தயாரிக்கும் பணியில் பெரிய முதலீடுகளை செய்யப்போவதாக சொன்னுச்சு... அப்பாலிக்கா கொரோணாவுக்கு மட்டுமே டிமாண்ட் இருக்க... நமக்கும் ஆராய்ச்சி மற்றும் மக்கள் சேவைக்கும் ரொம்ப தூரம்ன்னு சைலண்ட் மோட்ல இருந்தாங்க.. இப்போ அமிச்சர் ஏதோ புதுசா கஸ்டம் மேட் திட்டம் (போர்ட் கூட போடாத ஜியோ யூனிவர்சிடிக்கு ஆயிரம் கோடி சாங்ஷன் செஞ்ச மாதிரி..) கொண்டு வர்றாரோ...🤔🤔 பார்ப்போம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X