அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் பணியை தொடர விஜய் மக்கள் இயக்கம் முடிவு

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை--உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை பெற்ற விஜய் மக்கள் இயக்கம், அடுத்த சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், விஜய் மற்றும் இயக்க பெயரை பயன்படுத்தாமல், தேர்தலில் போட்டியிடலாம்' என பச்சைக் கொடி காட்டப்பட்டது. இதையடுத்து, பலரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர். இறுதியில்,

சென்னை--உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை பெற்ற விஜய் மக்கள் இயக்கம், அடுத்த சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



latest tamil news


விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், விஜய் மற்றும் இயக்க பெயரை பயன்படுத்தாமல், தேர்தலில் போட்டியிடலாம்' என பச்சைக் கொடி காட்டப்பட்டது. இதையடுத்து, பலரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர். இறுதியில், தமிழகம் முழுக்க விஜய் ரசிகர்கள் 129 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை சமீபத்தில் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, 'மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்து, மக்களின் நன்மதிப்பை பெறுங்கள்' என, அறிவுரை வழங்கி உள்ளார்.

மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார். அவர் கூறுகையில், 'தமிழக மக்களின் அடிப்படை பிரச்னையை தீர்க்க, அதை மத்திய - மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு விஜய் கூறியிருக்கிறார். அதன்படி, மக்கள் பணிகளைத் தொடர்வோம்' என்றார்.


latest tamil news


இந்த வெற்றியை அடுத்து, 'விரைவில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்க உள்ளது. 'அடுத்த சட்டசபை தேர்தலில், விஜய் தலைமையில் மக்கள் இயக்கம் களமிறங்கினாலும் ஆச்சரியம் இல்லை' என்கின்றனர், அதன் நிர்வாகிகள்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
28-அக்-202114:43:24 IST Report Abuse
Anand இவனெல்லாம் ஒரு ஆளுன்னு.....
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
28-அக்-202113:53:34 IST Report Abuse
Vena Suna உண்மையாக முதல்வர் ஆகலாம். செயலில் இறங்குங்கள்.
Rate this:
mohan - chennai,இந்தியா
28-அக்-202114:25:04 IST Report Abuse
mohanதன்து கார் வரியா ஒழுங்கா கட்ட முடியாத இவேறெல்லாம் அரசியலுக்கு வந்து என்ன கிழிச்சிட போறாரு ? பெருமாள் கோவில் லட்டு விஜய்க்கும் திருநெல்வெளி அல்வா அவருக்கு ஒட்டு போடுற ரசிகர்கள் / மக்களுக்கும் நிச்சயம் உண்டு கோவிந்தா கோவிந்தா...
Rate this:
Cancel
yavarum kelir - yadhum vore ,இந்தியா
28-அக்-202113:48:12 IST Report Abuse
yavarum kelir இவனை வெச்சு அரசியல் போன்றவன் யார்னு புரிஞ்சா புத்திசாலி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X