தமிழ்நாடு

அம்மா உணவக பணியாளர் பெண்கள் வேதனை

Added : அக் 28, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
அரசு மருத்துவமனை, ஆழ்வார்புரம், ஆரப்பாளையம், புதுாரில் 2, சுந்தரராஜபுரம், திருப்பரங்குன்றம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், சிமென்ட் ரோடு, புது ராமநாதபுரம் ரோடு, காந்திபுரம் மற்றும் பழங்காநத்தத்தில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. 12 பேர் கொண்ட பெண்கள் குழுவாக இணைந்து அம்மா உணவகத்தை நடத்துகின்றனர். அரிசி, பருப்பு, காய்கறிகளை மாநகராட்சி நிர்வாகம் வாங்கி தரும்.அந்தந்த
அம்மா உணவக பணியாளர் பெண்கள் வேதனை

அரசு மருத்துவமனை, ஆழ்வார்புரம், ஆரப்பாளையம், புதுாரில் 2, சுந்தரராஜபுரம், திருப்பரங்குன்றம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், சிமென்ட் ரோடு, புது ராமநாதபுரம் ரோடு, காந்திபுரம் மற்றும் பழங்காநத்தத்தில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

12 பேர் கொண்ட பெண்கள் குழுவாக இணைந்து அம்மா உணவகத்தை நடத்துகின்றனர். அரிசி, பருப்பு, காய்கறிகளை மாநகராட்சி நிர்வாகம் வாங்கி தரும்.அந்தந்த பகுதிக்கு ஏற்ப விற்பனை வாய்ப்பை பொறுத்து ரூ.2500 - ரூ.3000 வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் சனி, ஞாயிறு தொகையை திங்களுடன் சேர்த்து மண்டல கருவூலத்தில் கட்ட வேண்டும்.

விற்பனை இல்லாவிட்டாலும் கட்டாயமாக பணத்தை செலுத்த வேண்டும். ஆனால் நான்கு மாதங்களாக சம்பளமும் கிடைக்காமல் வேதனையில் உள்ளோம் என்கின்றனர் இப்பெண்கள்.அவர்கள் கூறியதாவது: இடத்திற்கு ஏற்ப காலையில் 600 - 1200 இட்லி, மதியம் 150 - 300 சாம்பார் மற்றும் தயிர் சாதம் தயாரிக்கிறோம்.

இரு குழுவாக பிரிந்து அதிகாலை முதல் மாலை வரை வேலை செய்கிறோம். வாரவிடுப்பு, பண்டிகை விடுப்பு, போனஸ் எங்களுக்கு கிடையாது. ஒன்பதாண்டுகளாக தினமும் ரூ.250 தான் சம்பளம் தந்தனர். புதிய ஆட்சி வந்தபின் சம்பளத்தை ரூ.325ஆக அதிகரித்து ஜூன் வரை சம்பளம் தந்தனர். தீபாவளிக்கு இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில்

இதுவரை யாருக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை. குழந்தைகளுக்கு புத்தாடை எடுக்க வழியின்றி அன்றாட செலவுக்கு கடன் வாங்கி கஷ்டப்படுகிறோம். அந்தந்த மாத சம்பளத்தை நிலுவையின்றி வழங்கினால் சந்தோஷமாக இருக்கும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
n.j.raman - madurai,இந்தியா
03-நவ-202108:40:51 IST Report Abuse
n.j.raman ஏழைகளின் வயித்தை நிரப்பும் இந்த உணவகத்தை யார் ஆர்மபித்தார் என்று நினைத்து அரசியல் செய்யாமல் மக்களின் நலனை எண்ணி ஆளும் கட்சி நல்லதை செய்தால் நல்லது.
Rate this:
Cancel
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
31-அக்-202123:16:57 IST Report Abuse
Unmai Vilambi விடியலை நோக்கி நூறு ருபாய், பிரியாணி கு ஆசை பட்டு ஒட்டு போட்ட தமிழ் மக்கள் தலையில் காய் வைத்துள்ளனர் அடிக்கடி கரண்ட் cut... கேட்டா முந்தைய ஆட்சியில் பராமரிப்பு சரி இல்லயாம் பராமரிப்பு சரி இல்லை என்றாலும் கரண்ட் எப்படி வந்தது? இவர்களின் ஒரே சாதனை கோவிலை கொள்ளை அடிப்பது மட்டுமே அப்பாவி ப்ராஹ்மணர்கள் வயிற்றில் அடிப்பது ஒன்று தான் தெரியும் - அதான் ட்ராவிடனின் வீரம்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
28-அக்-202117:46:05 IST Report Abuse
Bhaskaran ஒரே குறிக்கோள் அம்மா உணவகங்களை மூடுவது அல்லது அதனை கட்சிகாரர் கையில் கொடுப்பது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X