அரசியல் செய்தி

தமிழ்நாடு

'இதற்கெல்லாம் பயப்படுவேனா': சீறுகிறார் அண்ணாமலை

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (117)
Share
Advertisement
சென்னை : ''வழக்கு போடுவதாக கூறி தி.மு.க. என்னை ஒரு நாளும் மிரட்ட வேண்டாம். மிரட்டலுக்கு பணிவேன் என்றும் நினைக்க வேண்டாம்'' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்அண்ணாமலை அளித்த பேட்டி: 'யோக்கியமான ஆட்சியை தருவோம்' என கூறி மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்புக்கு வந்த தி.மு.க. தொடர்ந்து ஊழல் செய்வதில் குறியாக இருக்கிறது.தி.மு.க. அரசை 'கரப்ஷன்; கலெக் ஷன்; கட்மணி'

சென்னை : ''வழக்கு போடுவதாக கூறி தி.மு.க. என்னை ஒரு நாளும் மிரட்ட வேண்டாம். மிரட்டலுக்கு பணிவேன் என்றும் நினைக்க வேண்டாம்'' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்



latest tamil news



அண்ணாமலை அளித்த பேட்டி: 'யோக்கியமான ஆட்சியை தருவோம்' என கூறி மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்புக்கு வந்த தி.மு.க. தொடர்ந்து ஊழல் செய்வதில் குறியாக இருக்கிறது.தி.மு.க. அரசை 'கரப்ஷன்; கலெக் ஷன்; கட்மணி' என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடக்கிறது.

உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பணியை பா.ஜ. செய்து வருகிறது.அந்த வகையில் தான் மின் துறை ஊழல்கள் குறித்து கூறினேன். மின்சாரம் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு அதற்கான பணம் கொடுக்கும்போது கமிஷன் பெறப்படுகிறது என கூறினேன்.அதற்கான ஆவணங்களை கேட்டனர்; பணம் கொடுத்ததற்கான ஆவணங்களையும் வெளியிட்டு விட்டேன்.

உடனே 'இதுதான் ஆதாரமா?' என்று கேட்கின்றனர்.செய்யும் தவறை திருத்திக் கொள்ளாமல் விமர்சனத்துக்கு பதில் விமர்சனமாக கேள்வி கேட்டு பிரச்னையை மூடி மறைக்க பார்க்கின்றனர்.அதே மாதிரி தான் 'போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு தீபாவளிக்காக கொடுக்கப்படும் 'சுவீட் பாக்ஸ்' பரிசை கமிஷன் தொகை பேசி அதிக விலை கொடுத்து தனியாரிடம் வாங்கப் பார்க்கின்றனர்' என குறிப்பிட்டேன்.


latest tamil news


தவறு என்றதும் பிரச்னையாகி விட்டது. உடனே அரசு நிறுவனமான ஆவினில் வாங்க முடிவெடுத்து அறிவித்து விட்டனர். இந்த விவகாரத்தில் முதல்வரே தலையிட்டு உத்தரவிட்டுள்ளார்.அப்படியென்றால் முறைகேடு செய்ய தயாராக இருந்தனர் என்பது தானே பொருள்?தவறு நடக்க தடை போட்டு விட்டார் முதல்வர் என்றதும் பாராட்டினேன்.தவறு செய்யாமல் ஆட்சி செய்யட்டும்; அவர்களை பாராட்ட தயாராகத் தான் இருக்கிறோம்.

செய்வது அத்தனையும் தவறு; முறைகேடு. சொன்னால் மட்டும் கோபம் வருகிறது.தனியார் நிறுவனத்தில் குறைந்த அளவில் முதலீடு செய்து விட்டு அந்நிறுவனத்தில் இருந்து மின்சாரம் வாங்க அதிக விலைக்கு ஒப்பந்தம் போட்டு பல நுாறு கோடிகளை சம்பாதிக்க திட்டமிட்டனர். இதற்கான முன்னேற்பாடுகளை செய்தனர்.

அது தொடர்பான செய்தி வந்ததும் தி.மு.க. அரசின் மின் கொள்முதல் முறைகேடு என சொன்னேன்.இப்படித் தான் மின் துறை போக்குவரத்துத் துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் ஏகபோகமாக ஊழல் நடக்கிறது. எல்லா விபரங்களையும் திரட்டி வைத்திருக்கிறேன்.ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு கொண்டு வரப் போகிறேன். உண்மையைச் சொன்னால் உடனே 'மானநஷ்ட வழக்கு போடுவேன்; 500 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்' என்று வழக்கறிஞர் 'நோட்டீஸ்' கொடுக்கின்றனர்.

அதற்கெல்லாம் இந்த அண்ணாமலை பயப்படுவேனா.நீதிமன்றங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் என் மீது வழக்குப் போடட்டும். என்னவெல்லாம் சொல்கிறேனோ அத்தனைக்குமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்.இப்படி மிரட்டுவதால் பயந்து ஓடுவதற்கும் ஒதுங்குவதற்கும் அண்ணாமலை தி.மு.க. தலைவர்கள் வீட்டு வேலை ஆள் அல்ல. மத்தியிலும் 17 மாநிலங்களிலும் ஆட்சி பொறுப்பில் இருக்கும் மாபெரும் இயக்கத்தின் மாநில தலைவன்.தி.மு.க. ஊழலை அவ்வப்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ஊழல் இல்லா தமிழகத்தை உருவாக்கவே பாடுபடுகிறேன்.

இதுவும் பிரதான மக்கள் பணி தான்.வழக்கு போடுவதாக கூறி தி.மு.க. என்னை ஒரு நாளும் மிரட்ட வேண்டாம். மிரட்டலுக்கு பணிவேன் என்றும் நினைக்க வேண்டாம்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் மிரட்டலுக்கு பணிவேன் என்று நினைக்க வேண்டாம். கபர்தார் அந்த அமௌண்ட்டை கோர்ட்ல கட்டிடுவேன்
Rate this:
Cancel
28-அக்-202122:14:16 IST Report Abuse
அப்புசாமி பாவம் அண்ணாமலை கிட்டே ஆதாரம் இருக்கு ஹைன். ஆனா கோர்ட் மேலே நம்பிக்கை இல்லே ஹைன். அதான் வெளீல இப்பிடி கூவிக்கினு இருக்கார் ஹைன். ஐ.பி.எஸ் படிச்சவர் ஹைன். அவருக்கே கோர்ட்டுக்கு போக இஷ்டம் இல்லை ஹைன். அவர் நினைக்கிறது சரியாத்தான் இரிக்கும் ஹைன்.
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
28-அக்-202116:59:03 IST Report Abuse
INDIAN Kumar எதிர்க்கட்சி வேலையை அண்ணாமலை செய்கிறார் , உள் கட்சி குழப்பத்தால் எதிர்க்கட்சி தலைவர் குழம்பி கிடக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X