இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கூடாது: பைடனுக்கு எம்.பி.,க்கள் கடிதம்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன் : 'ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்குவதால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கக் கூடாது' என அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இரண்டு முக்கிய எம்.பி.க்கள் கடிதம் எழுதி உள்ளனர்.ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ரக அதிநவீன ஏவுகணைகள் வாங்க 2018ல் இந்தியா ஒப்பந்தம் செய்தது. தரையில் இருந்து ஆகாயத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய இந்த ஏவுகணைகள் வாங்க 39 ஆயிரம் கோடி ரூபாய்
India, US, Russian deal, Russia, Joe Biden, US President, Biden

வாஷிங்டன் : 'ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்குவதால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கக் கூடாது' என அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இரண்டு முக்கிய எம்.பி.க்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ரக அதிநவீன ஏவுகணைகள் வாங்க 2018ல் இந்தியா ஒப்பந்தம் செய்தது. தரையில் இருந்து ஆகாயத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய இந்த ஏவுகணைகள் வாங்க 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

மேலும் 'காட்சா' என்ற சட்டமும் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தின்படி அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நாடுகளுடன் ராணுவ மற்றும் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்க முடியும். திட்டமிட்டபடி ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.


latest tamil news


அதையடுத்து இந்தியா மீதும் பொருளாதார தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மார்க் வார்னர் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜான் கார்ன்யின் என்ற எம்.பி.க்கள் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.

அதில் அவர்கள் கூறியுள்ளதாவது: இந்தியா நம்முடைய மிகச் சிறந்த நட்பு நாடு. ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. நம் நாட்டின் நலனையும் நட்பையும் கருத்தில் கொண்டு இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கக் கூடாது. காட்சா சட்டத்தின்படி சில விதிவிலக்கு அளிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி இந்தியாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
30-அக்-202117:11:05 IST Report Abuse
Kumar அவர்களிம் வாங்கி அந்த தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு பின் இந்தியாவே அது போல தயாரிக்கும்.போபர்ஸ் ஞாபகத்திலேயே இருக்க வேண்டாம். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
28-அக்-202120:04:38 IST Report Abuse
பேசும் தமிழன் எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு என்ன வேண்டுமோ அதை செய்ய எங்களுக்கு முழு உரிமை இருக்கிரது.... அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது
Rate this:
Cancel
John Selvaraj - Dindigul,இத்தாலி
28-அக்-202108:10:08 IST Report Abuse
John Selvaraj ரசியா விடமிருந்து ஏவுகணை எதுக்கு வாஙகுறாங்க. அப்ப நம்ம தயாரிக்கிற பிருத்வி, ஆகாஷ், அக்னி ஏவுகணை எல்லாம் சும்மாவா?  மக்களின் வரிப் பணத்தை எப்படியெல்லாம் கமிஷனுக்காக வீணாக்குறாங்க. கேட்டா தேசபக்தி, இராணுவ ரகசியம் அப்படின்னு மக்களை ஏமாத்துவாங்க.
Rate this:
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
28-அக்-202109:10:02 IST Report Abuse
Jit Onetஇது S400 என்ற ஏவுகணை தடுப்பு கணைகள். எதிரிகள் ஏவும் கணைகளை அவை நம் தரை தளத்துக்கு வந்து வெடிப்பதற்கு முன்னாள் ஆகாயத்திலே தடுத்து வெடிக்கவைக்க உபையிகிக்க படும். இல்லையென்றால் நமது நகரங்களில் தேதியின் ஏவுகணை விழுந்தால் என்ன ஆகும்? முதன் முறையாக மோடி அரசுதான் இம்மாதிரி பாதுகாப்பு யோசனை ஆரம்பித்தது. இந்த தொழிநுட்பம் தற்போது இஸ்ரேல் (இரும்பு கவசம் என்று பெயர்), ரஷ்யா (S400 ), அமெரிக்கா விடம் இருக்கின்றன. சீனா இருக்கின்றது என்று சொல்கிறது ஆனால் அதை யாரும் பார்த்ததில்லை. நம் நாட்டில் உற்பத்தியாகும் ஏவுகணைகள் தற்போது பகையை அவர்கள் நாட்டிற்குள் சென்று தாக்க பயன்படும், உள்நாட்டிற்குள் வரும் கணைகள் தடுத்து நிறுத்த இன்னும் அதற்கான தளவாடங்கள் செய்யவில்லை...
Rate this:
R Ravikumar - chennai ,இந்தியா
28-அக்-202112:56:36 IST Report Abuse
R Ravikumarஇடை மறித்து தாக்கும் வல்லமை படைத்தது இந்த தொழில்நுட்பம் நம்மிடம் இருந்தாலும் .. ஆரம்ப நிலையில் மட்டுமே உள்ளது . இதற்கான ஆராச்சிக்கு தற்போதைக்கு நமக்கு நேரம் இல்லை என்பது தான் உண்மை . நம்மை சுற்றி எதிரிகளே அதிகம் உள்ளனர் . வாங்கி வைத்து கொண்டு நிதானமாக அந்த ரெசெர்ச் செய்வதே நமது அரசின் நோக்கம் . அதுவும் தவிர மேக் இந்தியா திட்டத்திற்கு ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்ய அல்லது சோதித்து பார்க்க உதவும் . நிலத்தால் நாம் தனிமை படுத்த பட்டு இருக்கிரோம் ( சீனா , பாக்கிஸ்தான் , பர்மா ) .. நீரில் ஆபத்து எப்போது வரும் என்று தெரியாது . வேறு வழியில்லை நாம் ஆயுதங்கள் வாங்கித்தான் ஆகா வேண்டும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X