பொது செய்தி

இந்தியா

தமிழகத்தில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள்: மத்திய அரசிடம் கோரிக்கை

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: தமிழகத்தில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. டில்லியில் நேற்று, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மருத்துவ தேவைகள்,

புதுடில்லி: தமிழகத்தில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



latest tamil news




டில்லியில் நேற்று, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக மருத்துவ தேவைகள், சுகாதாரத்துறை கட்டமைப்பு என, 11 கோரிக்கைகள், மத்திய அரசின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கையாக ஏற்கனவே 850 பேருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 800 பேருக்கு அனுமதி கோரி உள்ளோம்.மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து நடத்தவும், கோவையில் புதிய எய்ம்ஸ் கல்லுாரியை அமைக்கவும் கோரிக்கை வைத்து உள்ளோம். தமிழகத்தில் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்கவும் கேட்டுள்ளோம். கோவாக்சின் போட்டவர்களில் 12 லட்சம் பேர், இரண்டாவது தடுப்பூசிக்கு காத்திருப்பதால், உடனடியாக, 10 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது.


latest tamil news



தவிர, நீட் தேர்வு ரத்து குறித்த கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.தமிழகத்தில், 19 மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு அனுமதி கோரியும், ஒவ்வொன்றுக்கும் 50 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 950 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
28-அக்-202109:48:10 IST Report Abuse
duruvasar இருக்கும் அம்மா கிளினிக்கை மூடுவாங்கலாம். புதியதாக திறக்க அனுமதி கேட்பாங்களாம். பொது சுகாதாரம் மாநில வரம்பில் வருவது என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் சமூகநீதி, மாநில உரிமை என பகுத்தறிவு பாசறை நண்பர்கள் கருத்தை எழுதி தள்ளி விடுவார்கள்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-அக்-202106:13:54 IST Report Abuse
Natarajan Ramanathan பொது சுகாதாரம் மாநில அரசு வரம்பில் வரும்போது எதற்காக மத்திய அரசிடம் பிச்சை எடுக்க வேண்டும்? மேலும் எந்த கோரிக்கை என்றாலும் அதோடு இலவச இணைப்பாக நீட் தேர்வு ரத்து என்ற ஒரு கோரிக்கை என்பது அபத்தமாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X