பொது செய்தி

இந்தியா

ஐப்பசி பூஜைக்கு முன்பதிவு: நவ., 3ல் சபரிமலையில் தரிசனம் செய்யலாம்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சபரிமலை : ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்கள் நவ.3ல் தரிசனம் செய்யலாம் என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.சபரிமலையில் ஐப்பசி மாத பூஜை அக்.,17 முதல் 21 வரை நடந்தது. இங்கு கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் நிலக்கல் வரை வந்து விட்டு திரும்பி
Sabarimala, Ayyaooa Temple, Chithira Aattathirunal festival,

சபரிமலை : ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்கள் நவ.3ல் தரிசனம் செய்யலாம் என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலையில் ஐப்பசி மாத பூஜை அக்.,17 முதல் 21 வரை நடந்தது. இங்கு கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் நிலக்கல் வரை வந்து விட்டு திரும்பி சென்றனர்.


latest tamil news


இந்நிலையில் சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக நவ., 2 மாலை நடை திறக்கிறது. மறுநாள் அதிகாலை 5:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை பூஜைகள் நடைபெறும். இதையடுத்து, ஐப்பசி மாத பூஜையில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தவர்கள் நவ.3ல் தரிசனம் செய்யலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

ஏற்கனவே முன்பதிவு செய்த கூப்பன், இரண்டு தடுப்பூசி அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழுடன் பக்தர்கள் வரவேண்டும். நவ. 3ல் நடை அடைக்கப்பட்ட பின் மண்டலகால பூஜைகளுக்காக நவ.15 மாலையில் நடை திறக்கப்படுகிறது. நவ.16-ல் மண்டலகாலம் ஆரம்பமாகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
28-அக்-202118:29:31 IST Report Abuse
Vittalanand ஐயப்பன் வரலாறு புராணத்தில் இல்லை.
Rate this:
Cancel
sathish -  ( Posted via: Dinamalar Android App )
28-அக்-202116:09:30 IST Report Abuse
sathish magizchi
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X