சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆரணி கூட்டுறவு வங்கியில் கவரிங் நகை; ரூ.2.39 கோடி மோசடி கடன் வழங்கிய பணியாளர்கள்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை : திருவண்ணாமலை ஆரணி கூட்டுறவு வங்கியில், கவரிங் நகைகளை அடகு வைத்து 2.39 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு காரணமான, வங்கி பணியாளர்கள் மூன்று பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தங்க நகைகள் அடமானத்தில் கடன்

சென்னை : திருவண்ணாமலை ஆரணி கூட்டுறவு வங்கியில், கவரிங் நகைகளை அடகு வைத்து 2.39 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு காரணமான, வங்கி பணியாளர்கள் மூன்று பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.



latest tamil news


கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தங்க நகைகள் அடமானத்தில் கடன் வழங்குகின்றன.சட்டசபை தேர்தலின் போது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது.

இதனால், தள்ளுபடி சலுகையை பெற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு வங்கி கிளைகள், கடன் சங்கங்களில் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றனர். மேலும், போலி நகைகளையும் அடகு வைத்தனர். இதற்கு கூட்டுறவு அதிகாரிகளும் உடந்தை.தி.மு.க., ஆட்சியை பிடித்த நிலையில், 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.


தகுதியான பயனாளிகளை கண்டறிவதற்காக, கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தள்ளுபடி சலுகைக்காக பலர் வெவ்வேறு வங்கிகளில் கடன் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு மாவட்ட அதிகாரிகளை மற்றொரு மாவட்டத்திற்கு அனுப்பி, நகை கடன் வழங்கியது தொடர்பாக, 100 சதவீத ஆய்வு மேற்கொள்ள, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டது. அதன்படி, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், பல முறைகேடுகளை அதிகாரிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.


latest tamil news




திருவண்ணமாலை மாவட்டத்தில், ஆரணி கூட்டுறவு நகர வங்கி உள்ளது. அந்த வங்கியில், 4,537 பொது நகை கடன்கள் வாயிலாக, 29.12 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு நிலுவையில் இருந்தது.அடகு வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு நகை பொட்டலங்களை எடுத்து அதிகாரிகள் பரிசோதித்த போது, 77 பொட்டலங்களில் போலி கவரிங் நகைகளை, தங்க நகைகள் போல் வைத்து, 2.39 கோடி ரூபாய் கடன் வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வங்கி பொது மேலாளர் பொறுப்பு லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், கிளர்க் சரவணன், நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகியோர் கூட்டு சேர்ந்து, தங்கள் உறவினர்கள் பெயரில் கவரிங் நகைகளை வைத்து, கடன் பெற்று இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். நகை மதிப்பீட்டாளர் ஒப்பந்த பணியாளர் என்பதால் அவர் உடனடியாக, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். மற்ற மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதுடன், குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், கடன் வழங்குவதை கண்காணிக்க தவறிய வங்கியின் மேலாண் இயக்குனர் கல்யாண்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கூட்டுறவு வங்கி தலைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
28-அக்-202109:39:28 IST Report Abuse
duruvasar இப்போ புரியுதுங்களா மாநில உரிமையில் தலையிடும் ஆணவ மத்திய அரசு என முரசு கொட்டிய காங்கிரஸ், திமுக & மஜமு கூட்டணி மற்றும் துதிபாடும் ஊடகங்களின் கூப்பாடு. அவர்களுக்கு தெரியும் ரிசர்வ் பேங் கண்டோர் வில் வந்த இவனுங்க சாயம் வெளுக்கும்னு. அதுக்குத்தான் சமூகநீதி, மாநில உரிமை என ஸ்டிக்கர் ஒட்டாது. இங்க முட்டு கொடுத்தவங்க நிலையும் அதுதான்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
28-அக்-202109:29:47 IST Report Abuse
duruvasar இப்போ புரியுதுங்களா மாநில உரிமையில் தலையிடும் ஆணவ மத்திய அரசு என முரசு கொட்டிய காங்கிரஸ், திமுக & மஜமு கூட்டணி மற்றும் துதிபாடும் ஊடகங்களின் கூப்பாடு. அவர்களுக்கு தெரியும் ரிசர்வ் பேங் கண்டோர் வில் வந்த இவனுங்க சாயம் வெளுக்கும்னு. அதுக்குத்தான் சமூகநீதி, மாநில உரிமை என ஸ்டிக்கர் ஒட்டாது. இங்க முட்டு கொடுத்தவங்க நிலையும் அதுதான்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-அக்-202109:23:53 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எப்ப நடந்ததுன்னு சொல்லாம
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்இந்த செய்தியின் கடைசீ வரிகள் இதோ - கடன் வழங்குவதை கண்காணிக்க தவறிய வங்கியின் மேலாண் இயக்குனர் கல்யாண்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கூட்டுறவு வங்கி தலைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இப்போ சொல்லு நேத்து ராத்திரிதான் எல்லாம் நடந்ததோ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X