பொது செய்தி

தமிழ்நாடு

புதிய கல்வி கொள்கைக்கு செயல் வடிவம் - இல்லம் தேடி கல்வி

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: அரசியல் ரீதியாக புதிய கல்விக் கொள்கையை தி.மு.க., எதிர்த்தாலும், தற்போது உண்மையை புரிந்து, அதை அமல்படுத்த துவங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, 'இல்லம் தேடி கல்வி' திட்டம் துவங்கப்பட்டுள்ளது.நாடு முழுதும் அனைத்து தரப்பு மக்களுக்கும், எவ்வித பாகுபாடுமின்றி கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. சிறந்த
புதிய கல்வி கொள்கைக்கு செயல் வடிவம் - இல்லம் தேடி கல்வி

சென்னை: அரசியல் ரீதியாக புதிய கல்விக் கொள்கையை தி.மு.க., எதிர்த்தாலும், தற்போது உண்மையை புரிந்து, அதை அமல்படுத்த துவங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, 'இல்லம் தேடி கல்வி' திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும் அனைத்து தரப்பு மக்களுக்கும், எவ்வித பாகுபாடுமின்றி கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. சிறந்த கல்வியாளர்கள், நிபுணர்களை இணைத்து, மக்களிடமும், மாநிலங்களிடமும் கருத்து கேட்டு, அதன்படி இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டு, அமலுக்கும் வந்துள்ளது. ஆனால், 'குலக் கல்வியை ஊக்குவிக்கும் திட்டம். ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் திட்டம்' எனக் கூறி, அரசியல் ரீதியாக தி.மு.க., எதிர்த்து வந்தது. கல்வியாளர்கள் ஆட்சிக்கு வந்த பின், புதிய கல்விக் கொள்கையின் மகத்துவம் தி.மு.க.,வுக்கு புரிய துவங்கி விட்டதாக, கல்வியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


புதிய கொள்கையின் வெற்றி


latest tamil news


புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமான, தன்னார்வலர்களை வைத்து கல்வி கற்பிக்கும் திட்டத்தை, இல்லம் தேடி கல்வி என்ற பெயரில் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமே, புதிய கல்விக் கொள்கைக்கு கிடைத்த முதல் வெற்றி என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.மாணவர் இடைநிற்றலை குறைத்து, அனைத்து வழிகளிலும் கல்வியை வழங்குதல் குறித்து, புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பல்வேறு தன்னார்வ நிறுவனத்தினர் ஆகியோரை, பள்ளி செயல்பாடுகளுடன் இணைப்பது முக்கிய பணி என்றும் கூறப்பட்டு உள்ளது.இதன்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறையின், மத்திய நிதியுதவியிலான சமக்ர சிக் ஷா திட்டப் பணிகளை, தன்னார்வ நிறுவனங்கள், பல்வேறு தனியார் அமைப்புகளை வைத்து செயல்படுத்த துவங்கி உள்ளனர். இதற்காக, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள சமக்ர சிக் ஷா கட்டடத்தின் மூன்றாவது மாடி, தன்னார்வ நிறுவனத்தினருக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.


latest tamil news




கல்வி கொள்கை மறுவடிவம்


புதிய கல்விக் கொள்கையில், சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதி மாணவர்களுக்கு, பள்ளி சார்ந்த மற்றும் பள்ளி சாராத, அதாவது பள்ளி வகுப்புகள் மட்டுமின்றி, பள்ளிக்கு வெளியே முறைசாரா கல்வி வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை நேரடியாக அமல்படுத்தும் வகையில், இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.அதுவும், எந்த புதிய கல்விக் கொள்கையை, அரசியல் ரீதியாக எதிர்த்தாரோ, அந்த முதல்வர் ஸ்டாலினே, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் உருவான, இல்லம் தேடி கல்வி திட்டத்தையும் துவங்கி வைத்து, தன்னுடைய நேரடி திட்டமாக அறிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையின் மற்றொரு பிரிவில், பள்ளி மாணவர்களுக்கான நேரடி தன்னார்வ கற்பித்தல் குறித்து கூறப்பட்டுஉள்ளது. அதில், சமூக அளவிலும், முன்னாள் மாணவர்கள் என்ற அளவிலும், தன்னார்வலர்களை ஈடுபடுத்தி, பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை அதிகப்படுத்த வேண்டும்.இந்த திட்டங்களில் ஈடுபடும் தன்னார்வலர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர், அரசு பணியாளர், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோரின் விபரங்களை, 'ஆன்லைன்' வழியில் பதிவு செய்து 'டேட்டா பேஸ்' தயார் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன்படியே, இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கான புதிய இணையதளம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரை, இல்லம் தேடி கல்விக்கான தனி இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டு, இதுவரை 50 ஆயிரம் பேருக்கு மேல் பதிவும் செய்துள்ளனர். அதேபோல், மத்திய அரசின் சமக்ர சிக் ஷா திட்டத்தின் தமிழக அதிகாரிகளே, இல்லம் தேடி கல்வி திட்டத்தின் பொறுப்பாளர்களாக உள்ளனர். ஏற்கனவே மத்திய பணியில் இருந்து, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி, இதற்கான தலைமை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
28-அக்-202111:03:27 IST Report Abuse
raja சமசீர் கல்வியை இப்போ கட்டாயமா படிக்கணுமுன்னு வீட்டுக்கே போயி சொல்லித்தர போறாங்களாம்....நாசமா போச்சி மாணவர்களின் கதி....
Rate this:
Cancel
28-அக்-202109:52:44 IST Report Abuse
Kannan Krishnan Subramanian PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
28-அக்-202109:01:05 IST Report Abuse
GMM தமிழகம் பள்ளி கல்வியில் நிறைவடைந்து அனைவருக்கும் பட்டம் என்ற இலக்கை நோக்கி செல்வதாக ஒரு செய்தி வந்தது. இல்லம் தேடி கல்வி - மதம் மாற்ற பெரிதும் உதவும். பெற்றோர் கவனம் தேவை. இதில் தொழில் கல்வியை இணைக்க வேண்டும். தேசிய இணைப்பு மொழி கற்று கொள்ள வேண்டும். நவோதயா பள்ளி அனுமதிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X