ஜல்லி, எம் - சாண்ட் செயற்கை தட்டுப்பாடு? ஒரே வாரத்தில் 2 மடங்கு விலை அதிகரிப்பு!| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஜல்லி, எம் - சாண்ட் செயற்கை தட்டுப்பாடு? ஒரே வாரத்தில் 2 மடங்கு விலை அதிகரிப்பு!

Added : அக் 28, 2021 | கருத்துகள் (1)
Share
கருங்கல் ஜல்லி, எம் - சாண்ட் கிடைப்பதில் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவற்றின் விலை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கட்டுமான துறையினர் புகார் தெரிவித்தனர்.தமிழகத்தில் கட்டுமான பணிகள், ரெடிமிக்ஸ் கான்கிரீட், தார் கலவை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, கருங்கல் ஜல்லிகள் அத்தியாவசிய தேவை. ஆற்று மணல் குவாரிகள் இல்லாததால், எம் - சாண்ட் பயன்பாடும்
ஜல்லி, எம்-சாண்ட், தட்டுப்பாடு, அதிகரிப்பு

கருங்கல் ஜல்லி, எம் - சாண்ட் கிடைப்பதில் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவற்றின் விலை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கட்டுமான துறையினர் புகார் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கட்டுமான பணிகள், ரெடிமிக்ஸ் கான்கிரீட், தார் கலவை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, கருங்கல் ஜல்லிகள் அத்தியாவசிய தேவை. ஆற்று மணல் குவாரிகள் இல்லாததால், எம் - சாண்ட் பயன்பாடும் அதிகரித்துள்ளது.இதில் கருங்கல் ஜல்லிகள், 100 கன அடி, 1 யூனிட் என்ற அடிப்படையில் விற்கப்பட்டு வந்தது. தற்போது, குவாரி உரிமையாளர்கள், கருங்கல் ஜல்லிகளை டன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.கடந்த வாரம் 1,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 டன் எம் - சாண்ட், தற்போது 2,000 ரூபாய்க்கு விற்கப்படுவதால், கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 10 ஆண்டுகளாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள கருங்கல் குவாரிகள் ஏலம் விடப்படவில்லை. இதையடுத்து, கருங்கல் உள்ள பட்டா நிலங்களின் உரிமையாளர்கள், அரசிடம் அனுமதி பெற்று, குவாரிகளை இயக்கி வருகின்றனர்.

இந்த தனியார் குவாரிகளில் இருந்து ஜல்லிகள் எடுத்து செல்ல, கனிம வளத்துறை அனுமதி சீட்டு இருப்பதில்லை. இந்த விவகாரத்தில், அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் இருந்தனர்.ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட கலெக்டர்கள் கிடுக்கிப்பிடி காரணமாக, அனுமதி சீட்டு இல்லாத லாரிகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.இதனால், அதிருப்தி அடைந்த தனியார் குவாரி உரிமையாளர்கள், ஜல்லி விற்பனை அளவை குறைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுவே திடீர் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

இது குறித்து, எம் - சாண்ட் விற்பனையாளர் செந்தில்குமார் கூறியதாவது:தனியார் பட்டா நில குவாரிகளில் இருந்து 1 டன் ஜல்லியை எடுத்து செல்ல, 50 ரூபாய் அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தினமும் 1.5 லட்சம் டன் ஜல்லி எடுத்து வரப்படுவதால், 75 லட்சம் ரூபாய் வீதம் வருவாய் கிடைக்கும்.தமிழகம் முழுதும் தினமும் 15 லட்சம் டன் ஜல்லி எடுத்து செல்ல உரிய கட்டணம் செலுத்தினால், அரசுக்கு 7.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.அளவுக்கு அதிகமாக ஜல்லி எடுக்கப்பட்டதால், தனியார் குவாரிகளை அதன் உரிமையாளர்கள் இயக்க மறுக்கின்றனர். அதே நேரத்தில், 200 குவாரிகளை ஏலம் விட்டால் அரசுக்கு, ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.தற்போது எழுந்துள்ள பிரச்னையை தீர்க்க, கருங்கல் குவாரிகளை ஏலம் விடும் பணிகளை, தமிழக அரசு முடுக்கிவிட வேண்டும். முதல்வர் இதில் நல்ல முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X