பொது செய்தி

தமிழ்நாடு

பசுமையான மலைகளை அழிக்கும் 'மாபாதகம்': வேடிக்கை பார்க்கும் அரசுத்துறை அதிகாரிகள் மறைமுக ஆசி?

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
உடுமலை: உடுமலை அருகே, ஜம்புக்கல் கரடு மலைப்பகுதியை அழிக்கும் வகையில், பல லட்சக்கணக்கான மரங்கள் வெட்டி எரிக்கப்பட்டும், ரோடு அமைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சிமலையின் ஒரு பகுதியாக, ஜம்புக்கல் மலைத்தொடர் அமைந்துள்ளது. தம்புரான் கோவில் மலை, துருவத்து கோட்டை மலை, வரையாட்டு கரடு, சாத்துவார்
பசுமையான மலைகள், மாபாதகம், வேடிக்கை, அரசுத்துறை, அதிகாரிகள், மறைமுக ஆசி?

உடுமலை: உடுமலை அருகே, ஜம்புக்கல் கரடு மலைப்பகுதியை அழிக்கும் வகையில், பல லட்சக்கணக்கான மரங்கள் வெட்டி எரிக்கப்பட்டும், ரோடு அமைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சிமலையின் ஒரு பகுதியாக, ஜம்புக்கல் மலைத்தொடர் அமைந்துள்ளது. தம்புரான் கோவில் மலை, துருவத்து கோட்டை மலை, வரையாட்டு கரடு, சாத்துவார் ஓடை மலை, தேக்கங்காடு என 10க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான மலைகள் அமைந்துள்ளன. கடல் மட்டத்திலிருந்து, 1,200 மீட்டர் உயரம் அமைந்துள்ள இம்மலைத்தொடர், அமராவதி ஆற்றுக்கு நீர் வரத்து, ஓடைகள் நிரம்பியதாக உள்ளது. கரட்டுப்பகுதியில், சமதளப்பகுதியில், அப்பகுதியினர் விவசாயம் செய்து வருவாய் ஈட்டும் வகையில், 1970ம் ஆண்டு, தமிழக அரசால், நிலத்தில் விவசாயம் செய்து கொள்ள மட்டும், 50 சென்ட் முதல், 2 ஏக்கர் வரை நிபந்தனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news
விதிமுறை ஏராளம்


நிலம் பெறும் விவசாயிகள், மலையிலுள்ள மரங்கள், சந்தன மரங்களை அழிக்கக்கூடாது. ஓடைகள், பாறை, மாமூல் வழித்தடத்தை பாதிக்காமல், 5 அடி ஆழத்திற்கு மேல் தோண்டக்கூடாது. சாகுபடி செய்யும் மரங்கள், 3 ஆண்டுக்கு மேல் இருக்கக் கூடாது. அவற்றை வெட்ட, கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட ஏராளமான விதிமுறைகளுடன், அப்போதைய, பொள்ளாச்சி சப்-கலெக்டரால் வழங்கப்பட்டுள்ளது.


அழிக்கப்படும் மலைகள்


நிலம் பெற்றவர்கள் விவசாயம் செய்து வந்ததோடு, ஆண்டியகவுண்டனுார், எலையமுத்துார், செல்வபுரம் உள்ளிட்ட மலையடிவாரத்திலுள்ள, 18 கிராம மக்கள், ஆடு, மாடு மேய்த்தும் வந்தனர். கடந்த, சில ஆண்டுகள் ஏற்பட்ட வறட்சியால் மக்கள் செல்லாத நிலையில், தனி நபர் ஒட்டுமொத்த மலையை ஆக்கிரமிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டா வழங்கி, 50 ஆண்டுக்கு மேலான நிலையில், அனுபவத்தில் உள்ள விவசாயிகளிடம், சட்ட விரோதமாக, 99 வருட குத்தகை என்ற அடிப்படையில், முறையாக பதிவு செய்யாமல், எழுதி வாங்கியுள்ளனர். அரசு வழங்கிய நிபந்தனை பட்டாவில், நிலம் தோண்டக்கூடாது, மரங்களை அழிக்கக்கூடாது என உள்ள நிலையில், கடந்த சில மாதங்களில், பல ஆண்டுகள் வளர்ந்த, பல லட்சம் மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டுள்ளன.பசுமையாக காணப்பட்ட மலைகளை அழித்து, பல லட்சக்கணக்கான மரங்களை வேருடன் பிடுங்கி, தீ வைத்து எரித்தும், பெரிய மரக்கட்டைகளை கடத்தியும் வருகின்றனர்.


latest tamil news


Advertisement


மலைப்பகுதியில், 50 முதல் 80 அடி அடி அகலம் வரை, 60 கி.மீ., துாரத்திற்கும், மரங்களை அழித்து, மண் கடத்தியும், இதுவரை, ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள, காட்டுப்பகுதியை அழித்துள்ளனர். கிணறு, போர்வெல் அமைத்துள்ளதோடு, அமராவதி ஆறு மற்றும் மலையடிவாரத்திலுள்ள குளங்களுக்கு வரும் நீர் வழித்தடம் மறிக்கப்பட்டும், மாற்றி அமைக்கப்பட்டும் ஒட்டுமொத்த, மலையில் சுற்றுச்சூழலும் அழிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
மண் மூடிய குளம், குட்டைகள்


மலை, மரங்கள் அழிக்கப்பட்டதால், தற்போது பெய்த கன மழையால், மலையின் பெரும்பகுதி நிலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் உள்ள, பேச்சியாத்தாள் முடக்கு குட்டை, சில்லுாத்துகுளம் உள்ளிட்ட குளம், குட்டைகளில், 20 அடி உயரம் வரை மண் தேங்கி, மூடப்பட்டுள்ளது.கன்னிமார் ஓடை உள்ளிட்ட ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணைகளும் மண் மூடி, மழை வெள்ளம் முழுவதும் வீணாகியுள்ளது.


latest tamil news
குவாரி அமைக்கப்படுகிறதா?


மரங்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த மலையையும் அழிக்கும் வகையில், மண், கல் மற்றும் மணல் குவாரி அமைத்து, மதிப்பு மிகுந்த கனிம வளங்களை கொள்ளையடிக்க திட்டமிட்டே, பணிகள் நடப்பதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நுாற்றாண்டு பழமையான மரங்கள், பசுமையான மலை அழிக்கப்பட்டு, கனிம வளங்கள் சுரண்டப்பட்டுள்ளன.


latest tamil news
அதிசயங்கள் நிறைந்த மலை


பாறைகள், மரங்கள் அரியவகையாகவும், மதிப்பு மிகுந்ததாகவும் உள்ளதால், முன்னோர் மலைகளை பாதுகாக்கும் வகையில், கோவில்கள் அமைத்துள்ளனர்.பல நுாற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், தம்புரான் கோவில் இன்றும் கம்பீரமாக உள்ளன. மலை உச்சியில் விளக்கு மாடங்களுடன் கூடிய குளம், பழங்கால நாணயங்கள், புராதன சிலைகள், சின்னங்கள் உள்ளன.துருவத்து கோட்டை மலையில், துருவத்து பெருமாள் கோவில், துருவத்து பாவா தர்கா அமைந்துள்ளன.இங்கு திப்பு சுல்தான் காலத்தில், ஆயிரம் அடி நீளத்துக்கு மிகப்பெரிய குகையுடன் கூடிய, ஆயுத குடோனாக இருந்துள்ளது. தொல்லியல் சின்னங்களையும் அழிக்கும் வகையில், மலை சமன் செய்யப்பட்டு வருகிறது.


latest tamil news
அரசு நடவடிக்கை தேவை


மலைப்பகுதி அழிக்கப்படுவது குறித்து, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தனிக்குழு அமைத்து, முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். மரங்கள், மலை அழித்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீண்டும் பசுமையான மலையாக மாற்றும் வகையில், அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக, பல மடங்கு மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும்.சட்ட விரோதமாக மேற்கொள்ளபட்ட பதிவு ஆவணங்கள், 99 ஆண்டு குத்தகை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். 50 ஆண்டுக்கு முன், 350க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை பட்டா குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். மலை முழுவதும் வனப்பகுதியாக உள்ளதால், ஜம்புக்கல் மலைத்தொடரை முறையாக அளவீடு செய்து, வனத்துறை வசம் ஒப்படைத்து, வனப்பகுதியாக பாதுகாக்கவும், பசுமை பரப்பை அதிகரிக்கவும் வேண்டும்.


கண்டு கொள்ளாத வனத்துறை


வரையாட்டுக்கரடு பகுதியில் ஏராளமான வரையாடுகள், கேளை ஆடுகள், மான்கள், சிங்கவால் குரங்கு, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, முயல், மயில், பறவைகள் என ஏராளமான பல்லுயிரினங்கள் வசிக்கும் வனப்பகுதியாக உள்ளது. 2002ம் ஆண்டு, சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தில், இங்கு தேக்குமரங்கள் உள்ளிட்ட பலன் தரும் மரங்கள், பல இனத்தோட்டம் உருவாக்கும் திட்டத்தில் மரங்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.கடந்த, 1984ம் ஆண்டு, இப்பகுதி மலைக்கு செல்ல, சிறிய வழித்தடம் அமைத்த போது வனத்துறையினர் தடுத்துள்ளனர். தற்போது, பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் பிடுங்கி, கடத்தப்பட்டது குறித்தும், கிளைகள் தீ வைத்து எரித்தது குறித்தும் கண்டு கொள்ளவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
28-அக்-202123:25:45 IST Report Abuse
NARAYANAN.V அரசு அதிகாரிகள் காசு வந்துவிட்டால் எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள். இது எழுதப்படாத விதிமுறை.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
28-அக்-202117:59:25 IST Report Abuse
r.sundaram இருப்பவர்கள் எல்லாம் மலை முழுங்கி மஹாதேவன்கள், அதனால் இப்படித்தான் இருக்கும். பன் வெட்டுவது மாதிரி மதுரையை அடுத்த ஊரில் மலையை வெட்டி கொண்டு போனார்கள். என்னவெல்லாமோ செய்திகள் வந்தன. ஒரே நம்பரில் நான்கு வண்டிகள், பளிங்குபோல் வீடு என்று செய்திகள் வந்தன. முடிவில் என்னவாயிற்று, யாருக்கும் தெரிய வில்லை. இதற்க்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை? ஆனால் மலையை காண வில்லை, மலையை திரும்ப கொண்டுவர முடியுமா? இந்த நாட்டில் சாமான்யனுக்கு மட்டுமே சட்டம். அரசியல் வாதிகளுக்கும், அடாவடி தொழில் செய்பவர்களுக்கும், அவர்கள் சொல்படி சட்டம் கேட்க்கும்.
Rate this:
Cancel
Nirmal susai - sydney,ஆஸ்திரேலியா
28-அக்-202116:00:08 IST Report Abuse
Nirmal susai இந்த கும்பல் கடந்த பத்து ஆண்டுகள் என்ன செய்துகிட்டு இருந்தாங்க ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X