வடகொரியாவில் கடும் உணவு தட்டுப்பாடு: குறைவாக சாப்பிட அதிபர் உத்தரவு

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
பியாங் யாங்: ‛‛வடகொரியாவில் கடும் உணவுத்தட்டுப்பாடு நிலவுவதால் 2025ம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக சாப்பிட வேண்டும்,'' என்று அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா அச்சுறுத்தலால் வட கொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு ‛சீல்' வைத்துள்ளது. குறிப்பாக, உணவுப் பொருட்கள், எரிபொருள் என மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன
வடகொரியா, கடும் உணவு தட்டுப்பாடு, குறைவாக சாப்பிட வேண்டும், அதிபர் கிம் ஜாங் உன், உத்தரவு,

பியாங் யாங்: ‛‛வடகொரியாவில் கடும் உணவுத்தட்டுப்பாடு நிலவுவதால் 2025ம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக சாப்பிட வேண்டும்,'' என்று அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் வட கொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு ‛சீல்' வைத்துள்ளது. குறிப்பாக, உணவுப் பொருட்கள், எரிபொருள் என மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் மூடியுள்ளது.

இதனால் அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டாலர், 32 யூரோவாக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,300 ஆகும். வட கொரிய மக்கள் மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் 2025ம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அதிபரின் உத்தரவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


latest tamil news


வட கொரியாவின் சினுயிஜு நகரத்தில் வசிப்பவர்கள் கூறியதாவது: 2025 வரை அரசு குறைவாக உணவு உண்ணச் சொல்கிறது. இப்போதே உணவுக் கையிருப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. அன்றாடம் பற்றாக்குறையால் கடுமையாகத் தவிக்கிறோம். எங்களுக்கு உணவு பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை?. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசுத் தரப்பில், ‛‛வட கொரியா கொரோனாவைக் கட்டுப்படுத்தவே எல்லைகளை மூடியது. அதன் பலனை வட கொரியா அடைந்துள்ளது. அதேபோல் உணவுப் பஞ்சத்தையும் சமாளித்துக் கடந்து வரும்,'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா.,வின் உணவு மற்றும் விவசாயக் கழகம் வெளியிட்டுள்ள குறிப்பில், "வடகொரியா தனது உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால் ஆகஸ்ட் முதல் அக்டோபருக்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும். இந்த ஆண்டு மட்டும் 8,60,000 டன் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று அந்த அமைப்பு கணித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
28-அக்-202123:42:19 IST Report Abuse
NARAYANAN.V என்னங்க இது அநியாயமாக இருக்கிறது? மக்கள் பாச்சை, ஓணான், ஈசல் இவற்றை எல்லாம் கூடவா அளவோடு சாப்பிட வடகொரியா அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது ?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-அக்-202118:47:01 IST Report Abuse
sankaseshan இவன் கொழு கொழு கன்னத்தை பார்த்தால் மக்களின் நிலைமையைய புரிந்து கொள்ளலாம் அவனுடைய கவன மெல்லாம் குண்டுகள் ,ஆயுதங்கள் தயாரிப்பு ஏவுகணையில் அணுஆயுதம் அனுப்புவது . மக்களின் கஷ்டம் பற்றி கவலை இல்லை
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
28-அக்-202118:27:55 IST Report Abuse
மலரின் மகள் உண்பதில் அலாதியான பிரியம் கொண்டவர் இவர் என்று தான் பல செய்திகள். வகைவகையான வெளிநாட்டு மதுவகைகள் உணவுகள் என்று தனி பிரியம் கொண்டவர் இவர். இதனாலேயே வியாதிகள் பெருக்கெடுத்து இவர் இருக்கிறாரா போனாரா என்று சந்தேகம் கிளப்ப, இருக்கிறேனே என்று இப்போது புதிய சட்டதிட்டங்கள் மூலம் வெளிக்காட்டியிருக்கிறார். சீனாவின் எல்லைகளை சரக்கு போக்குவரத்திற்கு கூடவா மூடுவது? கொரநா சீனாவின் உணவு பொருள் சரக்குகள் மூலமே சப்பலி செய்யப்படுகிறது என்று சரியாக கண்டித்திருக்கிறார் போல. வட கொரியா கம்யூனிசத்தை பின்பற்றியதால் தவிக்கிறது, தென் கொரியா கேப்பிடலிசத்தை பின்பற்றியதால் செழிக்கிறது. உழைப்பை கேபிடலிசத்தில் மேம்படுத்திடுவதோடு அறிவை முதலீடு செய்தால் சுபிக்ஸம். சீனாவை நம்பிய தேசங்கள் எல்லாமே உணவு தட்டுப்பாட்டில் இருக்கிறது சீனாவையும் சேர்த்து என்பது ஒரு சிறந்த ஒற்றுமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X