இலங்கையில் ஒரு நாடு; ஒரே சட்டம் அமல்படுத்த சிறப்பு குழு: தமிழர்களுக்கு இடமில்லை

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
கொழும்பு: இலங்கையில் ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவை தயாரிக்க சர்ச்சைக்குரிய புத்த துறவி தலைமையில் 13 உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ளார்.அண்டை நாடான இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 24ல் மூன்று சர்ச்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் இறந்தனர். இந்த
இலங்கை, சிறப்பு குழு, தமிழர், இடமில்லை

கொழும்பு: இலங்கையில் ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவை தயாரிக்க சர்ச்சைக்குரிய புத்த துறவி தலைமையில் 13 உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ளார்.

அண்டை நாடான இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 24ல் மூன்று சர்ச்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் இறந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக இலங்கையில் செயல்படும் அமைப்பே காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து 'இலங்கையில் 'ஷரியத்' சட்டத்தை பின்பற்றுவதை தடை செய்ய வேண்டும். ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் இலங்கையில் 2019ல் நடந்த அதிபர் தேர்தலில் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்துவோம்' என கோத்தபய ராஜபக்சேவும் அவரது எஸ்.எல்.பி.பி. எனப்படும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியும் வாக்குறுதி அளித்தன.பெரும்பான்மையான புத்த மதத்தினரின் ஓட்டுகளை பெறும் நோக்கில் இந்த கோஷம் முன் வைக்கப்பட்டது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. அதிபராக கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். எஸ்.எல்.பி.பி. கட்சி ஆட்சியை பிடித்தது. பிரதமராக மகிந்தா ராஜபக்சே பதவியேற்றார்.

இந்நிலையில் ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவை தயாரிக்க 13 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ளார். இக்குழுவின் தலைவராக சர்ச்சைக்குரிய புத்தமத துறவி ஞானசரா நியமிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news



இலங்கையில் 2013ல் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஞானசராவின் பி.பி.எஸ். எனப்படும் 'போடு பால சேனா அமைப்பு' தான் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கிடையே அதிபர் அமைத்துள்ள 13பேர் அடங்கிய சிறப்பு குழுவில் நான்கு முஸ்லிம் அறிஞர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆனால் தமிழர்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
28-அக்-202118:59:19 IST Report Abuse
Soumya இங்கு போல் அங்கு மூர்க்கனுங்க சேட்ட பண்ண முடியாது அங்கு இருக்கும் சிங்களவர்கள் ஊடுகட்டி விளையாடுவானுங்க
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-அக்-202118:38:31 IST Report Abuse
sankaseshan தமிழ் தமிழ் என்று சொல்லி மொட்டை அடிப்பவர்கள் திராவிட கும்பல்கள் கனி அக்கா , குருமா , t.n. பாலு போன்றோரை தூது அனுப்பி சமரசம் செய்யலாம் பரிசு வாங்கி வருவார்கள் இலங்கை இஸ்லாமியர்கள் தங்களை தமிழர்களாக அடையாள படுத்திக்கொண்டதில்லை இலங்கையில் ஒரு வேஷம் இந்தியாவில் இன்னொன்று .
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
28-அக்-202118:23:31 IST Report Abuse
Nachiar நல்ல முண்ணேற்றம். இந்தியா இன்னும் காலம் தாழ்த்தாமல் ஒரே நாடு ஒரே சட்டம் முறையை உடனடியாக கொண்டுவர வேண்டும். விரும்பாதவர்கள் தங்கள் விரும்பிய சட்டங்கள் உள்ள நாட்டுக்கு குடி பெயரெல்லாம். good riddance and good bye சொல்லி வழி அனுப்பி வைக்க வேண்டும்
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
29-அக்-202104:57:48 IST Report Abuse
Sanny அதுக்கு நீ கனடாவில் அகதியாகாமல் இந்தியாவுக்கு முதலில் வந்து சேர். (அப்போ நீயும் விரும்பாத பிறவி தானே.)...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X