நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை: உச்சநீதிமன்றம்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மும்பை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை எனத் தெரிவித்துள்ளது.கடந்த செப்டம்பர் 12-ல் இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து 45 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், இன்னமும்
NEET, Supreme Court, Exam Result, நீட், உச்சநீதிமன்றம், தடை இல்லை, உத்தரவு, சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மும்பை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை எனத் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 12-ல் இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து 45 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், இன்னமும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே நீட் தேர்வு ஓ.எம்.ஆர்., தாளில் குளறுபடி உள்ளதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் தேர்வு எழுதிய இரு மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், ஓ.எம்.ஆர்., விடைத்தாள் குளறுபடி காரணமாக இரு மாணவர்களுக்கும் மறு தேர்வு நடத்த வேண்டும் எனவும், மறுதேர்வு நடத்தும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது எனவும் உத்தரவிட்டனர்.


latest tamil news



மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று (அக்.,28) விசாரணைக்கு வந்தது. அப்போது, ‛2 மாணவர்களுக்காக நீட் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல. 16 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்,' எனக் கூறி, மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தனர். இதனையடுத்து விரைவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-அக்-202111:30:32 IST Report Abuse
அப்புசாமி ஆமா... ஒரு ஜனாதிபதியின் வருகைக்கு, ஒரு பிரதமரின் வருகைக்காக ஒரு ஊரையே முடக்கி , மக்களை ஸ்தம்பிக்க வைக்கும்போது வாயைத் தொறக்க மாட்டாங்க.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
28-அக்-202115:32:17 IST Report Abuse
Vena Suna நீடு தேர்வுகள் வந்தால் ஒரு மாடனோ சுப்பனோ தற்கொலை செய்தால் அதை வைத்து அரசியல் செய்ய கழக கண்மணிகள் தயார்.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
28-அக்-202113:30:22 IST Report Abuse
Dhurvesh நீட் கண்டிப்பா தேவை:: என் இந்த நிலை இந்த மத்திய அரசு அவர்கள் ஆளும் வட மாநிலங்களில் அவ்வளவா மருத்துவ கல்லூரிகள் இல்லை TN தான் அதிகம்/அதுவும் நம் வரி பணத்தில் நாம் நிர்மாணித்துள்ளோம் ஆகவே அவர்கள் இந்த கல்லூரிகளை ஆக்கிரமிப்பு செய்யவே NEET என்று மறைமுக திட்டம் / ஆகவே தமிழர்களே உசார் நம் மருத்துவ கல்லூரிகளில் தமிழ் மாணவர்கள் தான் படிக்கணும் வேறு ஆளுக்கு இடம் இல்லை, இந்த வட நாட்டங்கள் அவர்கள் ஊரில் இப்படி கல்லூரிகள் கட்டி இருந்தால் நம் பிள்ளைகள் அங்கே படிக்கமுடியுமா யோசியுங்கள். எப்படி எனில் CBSE தேர்வு என்றால் TN KERALA KARNATAKA தான் முதல் 3 இடம் அனால் NEET என்றால் UP GUJARATH முதல் இடம் எப்படி ஏன் எனில் அங்கு கல்லூரி இல்லை அவன் நோகாம சொற்ப fees கட்டி நாம் நிர்மாணித்து உள்ள கல்லூரியில் படிச்சி Dr ஆகி சேவை செய்வான் அவன் ஊருக்கு
Rate this:
29-அக்-202107:49:02 IST Report Abuse
ஆரூர் ரங்தவறு. எல்லா மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் 60 சதவீத செலவை🤔 மத்திய அரசுதான் கொடுக்கிறது .( நேற்று கூட கிராம. மாவட்ட மருத்துவமனைகளை கட்ட நிதி கேட்டு மா. சு டெல்லிபோனது?) ஆனாலும் அகில இந்திய கோட்டா 15 சதவீதம் மட்டுமே . அதிலும் தமிழக☺ மாணவர்களுக்கும் இடம் உண்டு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X