மோடியின் இடத்திற்கு ராகுல் வர முடியாது: பிரசாந்த் கிஷோர்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (48) | |
Advertisement
பனாஜி: ‛‛ பிரதமர் மோடியின் வலிமை என்ன? என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுலால் ஒருபோதும் போட்டியிட முடியாது,'' என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு உத்திகளை பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார்.
இந்தியா, பாஜ, எதிர்ப்பு, ஸ்திரமான, கூட்டணி உருவாகாது, அரசியல் ஆலோசகர், பிரசாந்த் கிஷோர், கணிப்பு,

பனாஜி: ‛‛ பிரதமர் மோடியின் வலிமை என்ன? என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுலால் ஒருபோதும் போட்டியிட முடியாது,'' என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு உத்திகளை பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார். இந்நிலையில், கோவா அருங்காட்சியகத்தில் நடந்த கலந்துரையாடலில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்று பேசியதாவது:


latest tamil news


இந்தியாவில் பா.ஜ., இன்னும் 10 ஆண்டுக்கு வலுவான, சக்திமிக்க கட்சியாக இருக்கும். அந்தக் கட்சியுடன் இன்னும் நாம் பல ஆண்டுகளுக்குப் போராட வேண்டியதிருக்கும். பா.ஜ., அடுத்துவரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், தேசிய அரசியலில் அந்தக் கட்சிதான் மையமாக இருக்கும்.

மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பா.ஜ., எங்கும் போகாது. மக்கள் மோடியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று ராகுல் நினைக்கிறார். ஆனால், அது நடக்காது. மோடியின் வலிமை என்ன? என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுலால் ஒருபோதும் போட்டியிட முடியாது. அவரைத் தோற்கடிக்கவும் முடியாது.


latest tamil news


தேர்தலைப் பொறுத்தவரை நாட்டில் உள்ள வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தால் போதும். ஆதரவளித்தால் போதுமானது. மற்ற இரு பங்கு மக்கள் 10 முதல் 15 கட்சிகளுக்குத்தான் பிரித்து வாக்களித்திருப்பார்கள். ஆதலால், மோடிக்கு எதிராகவோ, பா.ஜ.,வுக்கு எதிராகவோ எந்த ஸ்திரமான கூட்டணியும் அணியும் உருவாகாது. 10 முதல் 15 கட்சிகளாகப் பிரிந்து ஓட்டு பிரிவதற்குக் காரணமே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
29-அக்-202103:54:21 IST Report Abuse
meenakshisundaram அட மாதவா இதை தானே இத்தினி நாளா இந்திய மக்கள் சொல்லிக்கின்னு இருக்காங்க ?இது எந்த ஒரு காங்கிரஸ் காரனுக்கும் சோனியாவுக்கும் தெரியாம இருக்கே
Rate this:
Cancel
28-அக்-202121:50:12 IST Report Abuse
S SRINIVASAN BJP to be careful, to increase confidence and to become over confidence these kind of statement coming, so that BJP May do some mistakes. pl remember 1983 WC against WI. this is also election stretagy to tumple BJP, so BJP shd brush aside these comments and work in their direction of doing good to.people
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
28-அக்-202121:28:25 IST Report Abuse
Nagercoil Suresh நல்ல கணிப்பு பிரசாந்த் கிஷோர் திறமையானவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் அதே நேரம் தினமலரில் கருத்தாளர்கள் சில நாட்களுக்கு முன்பே 1000 பிரசாந் கிஷோர் காங்கிரஸ் கட்சிக்கு உதவினாலும் தேறாது என்பதை தெரிவித்தது உண்டு , நிலைமை அவ்வாறு இருக்க ராகுல் காந்திக்கு முதிர்ச்சி தேவை, கூட்டணி காட்சிகளை தேர்தெடுக்கும் திறமை தேவை, அரசியலில் வெறும் மேடைப்பேச்சி மட்டும் போதாது, பிற்காலங்களில் ராகுல் அல்லது பிரியங்காவால் மட்டுமே பா ஜா கா விடமிருந்து ஆட்சியை கைப்பற்ற முடியும் அதுவாரைக்கும் காங்கிரஸ் காரர்கள் பீ பீ ஊதிக்கொண்டு அலையை வேண்டியது தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X