பொது செய்தி

இந்தியா

பாக்., வெற்றியை கொண்டாடினால் தேச துரோக வழக்கு: யோகி ஆதித்யநாத்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (85)
Share
Advertisement
லக்னோ: உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடுவோர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.துபாயில் சமீபத்தில் நடந்த ‛டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை, 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. இதனை நம் நாட்டில் சிலர் கொண்டாடியுள்ள வீடியோ சமூக
Sedition Law, Pakistan Victory, Celebrating, Yogi Adityanath, UP, பாகிஸ்தான், வெற்றி, கொண்டாட்டம், யோகி ஆதித்யநாத், தேச துரோக வழக்கு,

லக்னோ: உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடுவோர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

துபாயில் சமீபத்தில் நடந்த ‛டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை, 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. இதனை நம் நாட்டில் சிலர் கொண்டாடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. வெற்றியை கொண்டாடிய உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய 7 பேர் மீதும் தேசத் துரோக சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


latest tamil news


முன்னதாக காஷ்மீரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவிகள், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதுடன் அந்நாட்டுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவிகள் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை, பாக்., வெற்றியை தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்ஸாக வைத்து அதில், ‛நாம் வெற்றி பெற்றோம்' பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பள்ளி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்தது.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
28-அக்-202121:17:02 IST Report Abuse
Venkatakrishnan அதெல்லாம் சரி.... இந்தியா ஜெயிக்கனும்னு நீங்க நாடு பூரா யாகம் பன்னிங்களே என்ன ஆச்சு ? புஸ்ஸ் ஆயிடுச்சா...? சொல்லுங்கோ...
Rate this:
Bala - chennai,இந்தியா
29-அக்-202116:30:35 IST Report Abuse
Balaபோனா போதுன்னு கடவுள் ஒருமுறை அவுங்கள ஜெயிக்க வச்சுட்டார். இல்லாட்டி மூர்க்கனுங்க அவுனுங்க பிளேயர் வீடெல்லாம் கொளுத்திருப்பானுக. மூர்க்ககண் சும்மாவா இருப்பான். கடவுள் இரக்க குணத்துடன் பாவம் பக்கி பிளேயர் குடும்பத்தைல்லாம் காப்பாத்திட்டாரு....
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
28-அக்-202119:10:58 IST Report Abuse
Nachiar பகவான் கண்ணனே அனுப்பி வைத்த தர்மம் வீரர் வாழ்க நன்றி வீரரே, பிடிக்காத தேசத்தை விட்டு அவர் அவர்களுக்கு உகந்த தேசத்துக்கு போனால் எல்லோரும் சுகமாக வாழலாம். வாழ்க பாரதம். ஜெய் ஹிந்
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
28-அக்-202121:03:06 IST Report Abuse
Visu Iyerஅதான் மல்லையா... ஜி... நீரவ் மோடி ஜி என எல்லாரும் போய்ட்டாங்களா...?...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-அக்-202118:19:13 IST Report Abuse
sankaseshan திருடர்களுக்கு முக்கண்ணன் என்ற திமுக அடிமை முட்டு கொடுக்கற மாதிரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X