பாக்., வெற்றியை கொண்டாடினால் தேச துரோக வழக்கு: யோகி ஆதித்யநாத்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாக்., வெற்றியை கொண்டாடினால் தேச துரோக வழக்கு: யோகி ஆதித்யநாத்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (85)
Share
லக்னோ: உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடுவோர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.துபாயில் சமீபத்தில் நடந்த ‛டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை, 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. இதனை நம் நாட்டில் சிலர் கொண்டாடியுள்ள வீடியோ சமூக
Sedition Law, Pakistan Victory, Celebrating, Yogi Adityanath, UP, பாகிஸ்தான், வெற்றி, கொண்டாட்டம், யோகி ஆதித்யநாத், தேச துரோக வழக்கு,

லக்னோ: உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடுவோர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

துபாயில் சமீபத்தில் நடந்த ‛டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை, 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. இதனை நம் நாட்டில் சிலர் கொண்டாடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. வெற்றியை கொண்டாடிய உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய 7 பேர் மீதும் தேசத் துரோக சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


latest tamil news


முன்னதாக காஷ்மீரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவிகள், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதுடன் அந்நாட்டுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவிகள் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை, பாக்., வெற்றியை தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்ஸாக வைத்து அதில், ‛நாம் வெற்றி பெற்றோம்' பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பள்ளி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X