சென்னை : மாநிலம் முழுதும் பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்ள, 1.05 லட்சம் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பருவ மழை, இயற்கை சீற்றம் உள்ளிட்ட பாதிப்புகளின்போது, மீட்டு மற்றும் நிவாரண பணியில், அரசு அலுவலர்கள் மட்டுமின்றி, தன்னார்வலர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதற்காக, மாநில பேரிடர் மேலாண்மை துறை வாயிலாக, கிராமத்திற்கு இருவர் வீதம், 1.05 லட்சம் தன்னார்வலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்காக, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் மையம் துவங்கப்பட்டு உள்ளன.
மத்திய, மாநில அரசுகளின் பேரிடர் நிதியில் இருந்து, அடையாள அட்டை, இரவில் ஒளிரும் கவச உடை, காலணி, மரம் வெட்டும் கருவி உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. பேரிடர் நேரங்களில் செய்யும் பணிக்கு ஏற்ப ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது.வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருக்கும்படி, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE