கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஜவாஹிருல்லா, அப்துல்சமது பதவிகளுக்கு சிக்கல்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
திருநெல்வேலி: ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலர் அப்துல் சமது ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை சிட்டி சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.திருச்சி, தென்னுாரைச் சேர்ந்த அப்துல்ஹக்கீம், சென்னை சிட்டி சிவில் 15வது கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா 61, பொதுச்செயலாளர் அப்துல்சமது 52 ஆகியோர் கடந்த சட்டசபை
ஜவாஹிருல்லா, அப்துல்சமது, MLA,DMK,எம்எல்ஏ, திமுக, திராவிட முன்னேற்றக் கழகம், தி.மு.க.,

திருநெல்வேலி: ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலர் அப்துல் சமது ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை சிட்டி சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி, தென்னுாரைச் சேர்ந்த அப்துல்ஹக்கீம், சென்னை சிட்டி சிவில் 15வது கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா 61, பொதுச்செயலாளர் அப்துல்சமது 52 ஆகியோர் கடந்த சட்டசபை தேர்தலில் முறையே பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் தி.மு.க.,சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.

மனித நேய மக்கள் கட்சியின் விதிமுறை 6வது பிரிவின்படி வேறு கட்சி உறுப்பினர்கள், ம.ம.க.,வில் உறுப்பினராக முடியாது. 23வது பிரிவின்படி, ம.ம.க., தனி சின்னத்தில் போட்டியிடலாமே தவிர மற்ற கட்சி சின்னங்களில் போட்டியிட கூடாது என உள்ளது.


latest tamil newsகட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளர் அப்துல்சமது ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில் தங்களை தி.மு.க., உறுப்பினர்கள் என தெரிவித்து, அக்கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். எனவே, அவர்கள் மனித நேய மக்கள் கட்சியில் அடிப்படை உறுப்பினராக தொடர கூடாது என வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு இன்று (அக்.28ம் தேதி) விசாரணைக்கு வந்த போது, இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை டிச.,1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இருவரும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களாக தொடரும் பட்சத்தில் ம.ம.க., உறுப்பினராகவோ, தலைவர், பொதுச்செயலாளர் பொறுப்புகளில் தொடரமுடியாது. கட்சியில் இருப்பதாக தெரிவித்தால் எம்.எல்.ஏ., பதவிகளை இழக்க வேண்டிவரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
03-நவ-202115:24:19 IST Report Abuse
Bhaskaran Vithikalai maatrivittaal pochu avvalavuthaan
Rate this:
Cancel
29-அக்-202107:42:18 IST Report Abuse
ஆரூர் ரங் ஊருக்கே குல்லா போடும் கும்பல். 😛 உண்மை க்கு மாறான போலி அரசியல் செய்ய மதம் ஒரு 😒முகமூடி
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
29-அக்-202107:34:18 IST Report Abuse
மலரின் மகள் ஒரு கட்சியி சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் அந்த கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருக்கவேணும். காட்சிகள் மேலும் சில கொள்கை முடிவை எடுத்திருப்பார்கள் குறைந்த பட்சம் ஐந்து வருடங்களாகவாவது உறுப்பினராக இருக்கவேண்டும் என்று. கொள்கை முடிவு மாற்றி கொள்ளமுடியும். அடிப்படை விதிகள் படி இருப்பது மாறாது தீர்மானங்கள் மூலம் விதிகள் மாற்றப்படும் வரை. ஆகையால் இவர்கள் திமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக பதிந்து கொண்டு அதன் பிறகு திமுக உறுப்பினர்களாக தேர்தலில் வென்றிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் இவர்கள் எந்த கட்சியில் பதவி பிரமாணம் எடுக்கிறார்களோ அந்த கட்சிதான் இவர்களது, அந்த கட்சியின் விதிகளின்படி இவர்கள் தனியாக வேறு கட்சியும் இருக்க முடியாது. திமுக கூட இவர்களை தங்களின் கட்சியிலுருந்து வெளியேறி முழு திமுக காரர்களாக இருக்க சொல்லவேண்டும் அது தான் சரி. எங்கள் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்து கொண்டு உங்கள் கட்சிக்கு தலைவராக இரு என்பது திமுகவில் ஏற்கப்படக்கூடியதா? தங்கள் வசதிக்கு ஏற்றபடி செய்வது ஜனநாயகத்தின்பார்வராது. மதத்தின் பெயரால் கட்சியை உருவாக்கி கொண்டவர்கள் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்று அதில் இணைந்து செயல்படுவது எம் எல் வாக தேர்ந்தெடுக்கப்படுவது எல்லாம் அவர்களுக்கு ஏற்புடையது தானா திமுக கொள்கை பிடிப்புள்ள கட்சி என்று சொல்வார்கள். மற்றவர்கள் மதம் மாறவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் கட்சி மாறுவதும் தவறில்லை தான். அரசியல் என்பது சாக்கடை அல்ல. மிக உயரிய கருத்துக்களை கொண்ட சிறப்பான ஒன்று. அதை இஷ்டத்திற்கு வளைத்து கொண்டார்கள். தேர்தல் கமிஷன் செய்யவேண்டியது எத்துணையோ உள்ளது. இனி விண்ணப்பங்களில் தாங்கள் இந்த கட்சியின் சார்பில் அதன் அடிப்படை உறுப்பினர்களாக இருக்கின்ற பட்சத்தில் தேர்தலில் அந்த கட்சியின் பிரதிநிதியாக போட்டியிடுகிறோம் என்றும் வேறெந்த காட்சியிலும் அடிப்படை உறுப்பினர்களாக இல்லை என்றும் அப்படி இருந்திருந்தால் இந்த தேதியில் அதை விட்டு வெளியேறிவிட்டோம் என்று சான்று அளிக்கும் படி செய்யவேண்டும். தயாரான தகவல்களை தந்திருந்தால் அதை சரிபார்க்கவேண்டும். தேர்தல் காலங்களில் மட்டுமே தங்களின் பனி என்று என்ன கூடாது. தேர்தலுக்கு பிந்தைய களங்களில் பொறுப்புக்கல் அதிகம். ஒவ்வொரு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் தகவல்களை முழுமையாக ஆராயவேண்டும். அரசின் பல்வேறு கோப்புக்களை சரிபார்க்கவேண்டும். தேர்தல் கமிஷன் வழங்குகின்ற வெற்றி சான்றிதழ் ப்ரொவிஷியனல் தான் என்று இருக்கவேண்டும் முதல் ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லு படியாகவேண்டும். அந்த காலகட்டத்தில் முழு சரிபார்ப்பு செய்த பிறகே சான்றிதழ்கள் வழங்கப்படவேண்டும். நிர்வாக சிக்கல்கள் உண்டு அதற்காக சிலவற்றை தவிர்க்க கூடாது. ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளின் இன்றைய தகவல்கள் கடந்த ஐந்து தேர்தலின் தகவல்களை சரிபார்க்கவேண்டும். முதலில் அமைச்சர்களின் தகவலாகும் முக்கியத்துவம் தரவேண்டும். தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் தகவல்களையும் சரிபார்க்கவேண்டும். குற்றம் குறை இருந்தால் விளக்கம் பெற்று அதன் படி ஆக்சன் எடுக்கவேண்டும். மா ஆ அந்த அந்த மாவட்டத்தின் தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை நடத்துவதை விட ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிரந்தரமாக மாவட்ட தேர்தல் கமிஷனரை உருவாக்கவேண்டும். தேர்தல் கமிஷனை மேம்படுத்தவேண்டும். நமது ஜனநாயகத்தின் முக்கிய அம்சமே தேர்தல் கமிஷனில் உள்ளது. திரு டி என் சேஷானுக்கு பிறகு தேர்தலில் பெரும் மாற்றம் வந்ததாக தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X