பொது செய்தி

தமிழ்நாடு

காணாமல் போன பத்திரங்கள்: புகாரை பதிய கட்டுப்பாடுகள்

Added : அக் 28, 2021
Share
Advertisement
சென்னை : சொத்து பத்திரங்கள் காணாமல் போனதாக, பொய் புகார் கொடுப்போருக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில், பதிவுக்கான நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்றும்படி, போலீசாருக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்து பத்திரங்களை வாங்குவோர், அது தொடர்பான பத்திரங்களை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும். இந்த பத்திரங்கள் தவறான நபர்கள்

சென்னை : சொத்து பத்திரங்கள் காணாமல் போனதாக, பொய் புகார் கொடுப்போருக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில், பதிவுக்கான நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்றும்படி, போலீசாருக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்து பத்திரங்களை வாங்குவோர், அது தொடர்பான பத்திரங்களை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும். இந்த பத்திரங்கள் தவறான நபர்கள் கையில் சிக்கினால், போலி ஆவணங்கள் தயாரித்து, சொத்தை அபகரிக்க வாய்ப்புள்ளது.சொத்து பத்திரங்கள் காணாமல் போனால், காவல் துறையில் புகார் அளித்து, அதற்கான ஒப்புகை சீட்டு அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான சான்று பெற வேண்டும். அந்த சான்றுடன் சார் - பதிவாளரிடம் பிரதி ஆவணம் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.சிலர் பத்திரத்தை அடமானம் வைத்து, கடன் வாங்குகின்றனர். இவர்கள், கடன் கொடுப்போரிடம் எவ்வித ஒப்பந்தமும் இன்றி, அசல் பத்திரத்தை மட்டும் கொடுத்து வைக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் அசல் பத்திரம் தொலைந்து விட்டதாக, காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, சான்று பெறுகின்றனர். இதை காட்டி, சான்றிடப்பட்ட பிரதி ஆவணத்தை வாங்கி, சொத்துக்களை விற்கின்றனர். இதுபோன்ற நபர்களால் காவல் துறைக்கும், பதிவுத் துறைக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.இதனால், பத்திரம் தொலைந்ததாக வரும் புகார்களை பதிவு செய்ய, புதிய நிபந்தனை விதிக்க, காவல் துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி, புகார் மனுவுடன் கூடுதலாக, 'நோட்டரி பப்ளிக்' சான்றிட்ட ஒரு உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதில், 'நான் யாரிடமும் பத்திரத்தை அடமானம் வைக்கவில்லை. இதில், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நானே பொறுப்பு' என்ற உறுதிமொழி இருக்க வேண்டும்.இத்துடன் சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பான சமீபத்திய வில்லங்க சான்றிதழும், நாளிதழில் விளம்பரம் வெளியிட்ட பிரதியும் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ள புகார்களை மட்டுமே வாங்க வேண்டும்; இதில் எந்த குளறுபடியும் கூடாது என, போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X