கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெண் இன்ஸ்.,க்கு ரூ.1 லட்சம் அபராதம்

Added : அக் 28, 2021
Share
Advertisement
சென்னை : மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் வதானி. இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:கடந்த 2018ல், விஜயலட்சுமி என்பவர் என் மீது கொடுத்த புகாரில், ஐ.சி.எப்., போலீஸ் இன்ஸ்பெக்டர் காமேஸ்வரி, என்னை அடிக்கடி காவல் நிலையம் அழைத்து, சட்ட விரோதமாக

சென்னை : மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் வதானி. இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
கடந்த 2018ல், விஜயலட்சுமி என்பவர் என் மீது கொடுத்த புகாரில், ஐ.சி.எப்., போலீஸ் இன்ஸ்பெக்டர் காமேஸ்வரி, என்னை அடிக்கடி காவல் நிலையம் அழைத்து, சட்ட விரோதமாக அடைத்து சித்ரவதை செய்தார். என் மீது கொடுத்த புகாரில், ஆறு மாதம் கழித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எனவே, என்னை கைது செய்த விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதால், இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், 'மனுதாரர் விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்துள்ளது. எனவே, மனுதாரருக்கு, 1 லட்சம் ரூபாயை அரசு வழங்க வேண்டும். அத்தொகையை இன்ஸ்பெக்டரிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம். மேலும், இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X