அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேவமணி கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரணை

Added : அக் 28, 2021
Share
Advertisement
காரைக்கால் : ''காரைக்கால் பா.ம.க., மாவட்ட செயலாளர் தேவமணி கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்'' என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பா.ம.க., செயலாளர் தேவமணி(50), கடந்த 22ம் தேதி, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில், பா.ம.க., இளைஞரணி தலைவரும் எம்.பி.,யுமான அன்புமணி ராமதாஸ், நேற்று
 தேவமணி கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரணை


காரைக்கால் : ''காரைக்கால் பா.ம.க., மாவட்ட செயலாளர் தேவமணி கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்'' என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பா.ம.க., செயலாளர் தேவமணி(50), கடந்த 22ம் தேதி, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில், பா.ம.க., இளைஞரணி தலைவரும் எம்.பி.,யுமான அன்புமணி ராமதாஸ், நேற்று பிற்பகல், திருநள்ளாறில் உள்ள தேவமணி வீட்டுக்கு சென்று, அவரது உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், தேவமணி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முன்னாள் எம்.பி., தன்ராஜ் மற்றும் கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
தேவமணி, பா,.ம.க., தொடங்கப்பட்ட காலத்திலேயே கட்சியின் அடிமட்டத் தொண்டராக இணைந்து, தனது கடுமையான உழைப்பால் மாவட்ட செயலாளராக உயர்ந்தவர்.மருத்துவர் ராமதாஸ் அறிவித்த போராட்டங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக நடத்தினார். மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடியுள்ளார். பொது மக்களுக்காக பல போராட்டம் நடத்தியவரை கூலிப்படை வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இதன் பின்னணியில் மிகப்பெரிய சூழ்ச்சி உள்ளது.இந்தக் கொலையின் பின்னணியில் காவல்துறையை சேர்ந்த ஒரு சிலர் இருப்பதாக செய்தி வருகிறது. இவ்வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.கூலிக்கு படுகொலை செய்யும் கலாசாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இத்தகைய கூலிப்படையினர் மீது புதுச்சேரி அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவமணி கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவமணி படுகொலை தொடர்பாக, முன்னாள் எம்.பி., தன்ராஜ் தலைமையிலான குழு புதுச்சேரி கவர்னர், முதல்வரை சந்தித்து, முழுமையான விசாரணை நடத்த வலியுறுத்தும். அவ்வாறு விசாரணை நடத்தப்படா விட்டால் சி.பி.ஐ., விசாரணை கோரி தொடர் போராட்டங்களை பா.ம.க., நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X