அரசியல் செய்தி

தமிழ்நாடு

பன்னீர் நியாயவாதி! தினகரன் வக்காலத்து

Added : அக் 28, 2021
Share
Advertisement
தஞ்சாவூர் : ''சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்ப்பது குறித்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியிருப்பது சரியானது தான். அவர், எப்போதும் நியாயமாகத்தான் பேசுவார்,'' என, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் கூறினார்.மருது சகோதரர்கள் குருபூஜை விழாவையொட்டி, தஞ்சாவூரில் நேற்று அவர்களது படத்துக்கு மாலை அணிவித்த தினகரன் கூறியதாவது:மருது சகோதரர்கள் வீரத்திலும்,

தஞ்சாவூர் : ''சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்ப்பது குறித்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியிருப்பது சரியானது தான். அவர், எப்போதும் நியாயமாகத்தான் பேசுவார்,'' என, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் கூறினார்.

மருது சகோதரர்கள் குருபூஜை விழாவையொட்டி, தஞ்சாவூரில் நேற்று அவர்களது படத்துக்கு மாலை அணிவித்த தினகரன் கூறியதாவது:

மருது சகோதரர்கள் வீரத்திலும், விசுவாசத்திலும் சிறந்தவர்கள். நல்ல மனிதர்களுடன் இணைந்து தமிழகத்தில், ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டு வருவதே இலக்கு.சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்ப்பது குறித்து, கட்சி கூட்டத்தில் முடிவு செய்வோம், என பன்னீர்செல்வம் கூறிய கருத்து சரியானது தான். அவர், எப்போதுமே நியாயமாகத்தான் பேசுவார். அவர் மனதில் பட்ட கருத்தைத் துணிந்து சொல்லியிருக்கிறார்.ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்கவும், தமிழகத்தில் உண்மையான ஆட்சியை ஏற்படுத்தவும் அ.ம.மு.க., உருவாக்கப்பட்டது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X