பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛மயிலாடுதுறை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
TN,Tamilnadu, 9 District, Weather, Report, தமிழகம், 9 மாவட்டங்கள், மிக கனமழை, கனமழை, சென்னை வானிலை ஆய்வு மையம், அறிவிப்பு,

சென்னை: ‛‛மயிலாடுதுறை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


latest tamil news



தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக



இன்று (அக்.,28 ம்தேதி): மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், இதர கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news


Advertisement

நாளை 29ம் தேதி: கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news



சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:


கடம்பூர் (துாத்துக்குடி) 9 செ.மீ., அவினாசி (திருப்பூர்), கயத்தாறு (துாத்துக்குடி), பரமக்குடி (ராமநாதபுரம்), தென்காசி, பந்தலுார் (நீலகிரி) தலா 6 செ.மீ., கயத்தாறு ஏஆர்ஜி (துாத்துக்குடி) 5 செ.மீ., வாலிநோக்கம் (ராமநாதபுரம்) கிணற்கோரை (நீலகிரி), பெரியநாயக்கன்பாளையம் (கோவை) தலா 4 செ.மீ., திருமங்கலம் (மதுரை), அன்னுார் (கோவை), பாம்பன் (ராமநாதபுரம்), விருதுநகர், பெரியாறு (தேனி), சிவகிரி (தென்காசி), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), ஹரிசன் எஸ்டேட் (நீலகிரி) தலா 3 செ.மீ.,


மீனவர்களுக்கான எச்சரிக்கை:



latest tamil news



வங்கக்கடல் பகுதிகள்:


இன்று 28 ம்தேதி முதல் 30 வரை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை 29ம் தேதி முதல் 31 வரை: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அரபிக்கடல் பகுதிகள்:



நாளை 29ம் தேதி முதல் 31 வரை: கேரள கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X