திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் சமூகவியல் துறை சார்பில் பெரியாரும் இஸ்லாமும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ரியாஸ் அகமது என்பவர் பேசியதாவது: கடவுளே இல்லை என்று கூறிய ஈ.வெ.ரா., எப்படி இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டார் என்ற கேள்வி எழலாம்.
சமூக முன்னேற்றத்திற்கும் கலாச்சார முன்னேற்றத்திற்கும் ஒரு மதம் தடைபோடும் என்றால் அந்த மதம் வேண்டாம் என்றுதான் ஈ.வெ.ரா சொன்னார். இது இல்லாமல் எந்த மதம் இருக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வேன் என்று சொன்னார். எனவே தீண்டாமை என்று சொல்லக்கூடிய புள்ளி தான் ஈ வெ ரா வை இஸ்லாம் மதத்தோடு நெருக்கமாக்கியது. மதங்கள் முடிந்த பிறகுதான் உலக சமாதானமும் ஒற்றுமையும் ஏற்படும் என்றார் ஈவெரா.
இஸ்லாமியர்கள் யாராவது நான் கடவுள் என்று சொல்லி பார்த்திருக்கிறீர்களா என்று ஈவெரா குறிப்பிடுகிறார். இது போன்று பேசிக் கொண்டே இருப்பதால் திராவிடர் கழகத்திலிருந்தே அவரை சிலர் எதிர்த்தனர். நீங்கள் இப்படி பேசுவதால் உங்கள் செல்வாக்கு குறைகிறது என்று தெரிவித்தனர். அதற்கு ஈவெரா நான் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக இதை சொல்லி வருகிறேன் எனது செல்வாக்கு ஒன்றும் குறையவில்லை என்றார். போலியாக நடித்துக் கொண்டு நான்கு பேர் நல்லவர் என்று சொல்லும் அளவுக்கு எனது வாழ்க்கை அமையவில்லை திராவிட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இதை பேசி வருகிறேன் என்றார்.

திராவிட நாடு குறித்து ஈ வெ ரா பேச ஆரம்பிக்கும்போது முஸ்லிம்கள் எதிர்த்தனர். அதற்கு எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு என்று சொன்னார். திராவிடர்களிடம் ஏற்றத்தாழ்வு இல்லை என்று ஈவெரா சொன்னார். அதுதான் கீழடி ஆய்வில் தெரிகிறது. கீழடி ஆராய்ச்சியை எதற்கு எதிர்க்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா.
முகரம் பண்டிகையில் மூடத்தனமான விஷயங்கள் கடைபிடிக்கப்பட்டதால் அதை ஈவெரா கண்டித்தார் என்று பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE