கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில் நகை உருக்குதல்; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை: அறங்காவலர்கள் நியமிக்கும் வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக கோவில்களில் உள்ள தங்கத்தை உருக்கி, கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் நிதி மூலம் கோவில்களுக்கு தேவையான பணிகள் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் கோவில்களில் உள்ள தங்க
கோவில்நகை, சென்னை உயர்நீதிமன்றம்,

சென்னை: அறங்காவலர்கள் நியமிக்கும் வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக கோவில்களில் உள்ள தங்கத்தை உருக்கி, கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் நிதி மூலம் கோவில்களுக்கு தேவையான பணிகள் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்ற இந்து சமய அறநிலைய துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை எதிர்த்து இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை மற்றும் டி.ஆர்.ரமேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோவில் நகைகளை உருக்கவில்லை. காணிக்கையாக வந்த நகைகள் தான் உருக்கப்படுகிறது. ஏற்கனவே நகைகள் உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.11.5 கோடி வட்டி வருமானமாக கிடைத்து வருகிறது. அது கோவில் நலனுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளாக தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.


latest tamil news




அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அறங்காவலர்கள் இல்லாமல் நகைகளை உருக்க முடியாது எனக் கூறினர்.
இதையடுத்து, அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகே நகைகள் உருக்கப்படும் என உத்தரவாதம் அளித்த தலைமை வழக்கறிஞர், நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் எனக்கூறினார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்கலாம். அறங்காவலர்கள் நியமிக்கும் வரை நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது என உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிச., 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Transtrac - Berlin,ஜெர்மனி
29-அக்-202109:25:38 IST Report Abuse
Transtrac இந்து என்று மதமே இல்லை கூறிய பன்றிகளை கோவில் நகை தொட இல்லை நெருங்க கூட விட கூடாது.
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
28-அக்-202121:59:11 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் கோர்ட்டு ஆட்டைய போட உடமாட்டேங்குது ஆரிய கோர்ட்டுன்னு சொல்லுவோம்
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
28-அக்-202120:35:23 IST Report Abuse
Sathyanarayanan Subramanian தங்க கட்டிகள் ஆக்கி ஆட்டைய போடலாம் பின்னால். யார் கேட்க போகின்றனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X