பொது செய்தி

இந்தியா

அ.தி.மு.க., எஃகு கோட்டை; யாராலும் அழிக்க முடியாது: ஜெயக்குமார்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: ‛‛அ.தி.மு.க.,வில் சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்றைக்கும் இடமில்லை. அ.தி.மு.க., எஃகு கோட்டை யார் நினைத்தாலும், எந்த கரையானாலும் அழிக்க முடியாது,'' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க.,வில்
Jayakumar, ADMK, ExMinister, ஜெயக்குமார், அதிமுக, எஃகு கோட்டை,

சென்னை: ‛‛அ.தி.மு.க.,வில் சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்றைக்கும் இடமில்லை. அ.தி.மு.க., எஃகு கோட்டை யார் நினைத்தாலும், எந்த கரையானாலும் அழிக்க முடியாது,'' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க.,வில் சசிகலாவிற்கோ, அவரது குடும்பத்தினருக்கோ இன்றைக்கும், என்றைக்கும் இடமில்லை என்பதில் தலைமை உறுதியாக உள்ளது. ஒருங்கிணைப்பாளரின் கருத்துக்கு எதிர் கருத்து சொன்னால் அது சரியாக இருக்காது.


latest tamil news



அ.தி.மு.க., என்பது ஒரு எஃகு கோட்டை; யார் நினைத்தாலும் எந்தக் கரையான்கள் வந்தாலும் அதனை அழிக்க முடியாது. தொண்டர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம் அ.தி.மு.க., சசிகலா உடன் தொடர்பில் இருந்த அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. டி.டி.வி.தினகரன் இல்லத் திருமணத்திற்கு சென்ற பன்னீர்செல்வத்தின் சகோதரர் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்படுவாரா? என்பதை கட்சி கவனித்துக்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-அக்-202106:48:26 IST Report Abuse
Mani . V கொரோனா காலத்தில் சினிமாக்கள் அதுவும் குறிப்பாக காமெடி சினிமாக்கள் வரவில்லை என்ற குறையை இந்த காமெடி பீஸ் தீர்த்து வைக்கிறார்.
Rate this:
Cancel
28-அக்-202122:06:27 IST Report Abuse
அப்புசாமி எஃகு கோட்டையை ஏன் அழிக்கணும்? எல்லாப் பெருச்சாளிகளுக்கும் இடம் குடுக்கணும்னு தானே கேட்கிறோம்.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
28-அக்-202120:58:51 IST Report Abuse
John Miller இதே அதிமுகவில்தானே சின்னம்மாவை பொது செயலாளராக தெரிந்து எடுத்து அவரிடம் கொடுத்தீர்கள்.
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
29-அக்-202107:16:51 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagamஅந்த முக்கிய பதினெட்டுப் (18) பேர் பதவி இழந்த கதை தெரியாதோ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X