சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கெட்டுப்போன சத்துணவு முட்டை ; அமைப்பாளர் சஸ்பெண்டு; ஆபத்தில் தப்பிய திருப்பூர் குழந்தைகள்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் அருகே வாவிபாளையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டை வினியோகித்த சத்துணவு அமைப்பாளர் இன்று (அக்.28ம் தேதி) சஸ்பெண்டு செய்யப்பட்டார். முன்கூட்டியே தெரிந்ததால் பல குழந்தைகள் பாதுகாப்பாக தப்பினர். திருப்பூர் மாநகராட்சி, 18வது வார்டு வாவிபாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி
திருப்பூர், வாவிபாளையம், துவக்கப்பள்ளி, அழுகிய முட்டை, சத்துணவு அமைப்பாளர், சஸ்பெண்டு

திருப்பூர்: திருப்பூர் அருகே வாவிபாளையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டை வினியோகித்த சத்துணவு அமைப்பாளர் இன்று (அக்.28ம் தேதி) சஸ்பெண்டு செய்யப்பட்டார். முன்கூட்டியே தெரிந்ததால் பல குழந்தைகள் பாதுகாப்பாக தப்பினர்.

திருப்பூர் மாநகராட்சி, 18வது வார்டு வாவிபாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி இயங்காததால், குழந்தைகளின் பெற்றோரை வரவழைத்து கடந்த 26ம் தேதி சத்துணவு அமைப்பாளர் முட்டை வினியோகம் செய்துள்ளார். வீட்டுக்கு எடுத்துச் சென்று பார்த்தபோது, முட்டை அழுகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவற்றை குப்பையில் வீசினர்.


latest tamil newsஇதுகுறித்து, மா.கம்யூ., வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் சிகாமணி, மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பிய புகார் மனுவில், ‛வாவிபாளையம் துவக்கப்பள்ளியில், குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய முட்டைகள் அழுகிய நிலையில் இருந்துள்ளது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவித்தார்.

இதையறிந்த, மாநகராட்சி சுகாதாரத் துறையினர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். கெட்டுப்போன முட்டைகளை வினியோகித்த, சத்துணவு அமைப்பாளர் மகேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர். அதனடிப்படையில், திருப்பூர் கலெக்டர் நேர்முக உதவியாளர் (சத்துணவு), சத்துணவு அமைப்பாளர் மகேஸ்வரியை இன்று சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-அக்-202106:20:12 IST Report Abuse
Mani . V இந்த அவலம் அனைத்து ஆட்சியிலும் நடக்கிறது. சென்ற ஆட்சியிலும் இது நடந்தது. அதை இப்பொழுது இவர்களும் தொடர்கிறார்கள். இரண்டுமே ஊழல் கட்சிகள்தான்.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
29-அக்-202104:48:49 IST Report Abuse
Ram இதுதான் திருட்டு முன்னேற்ற கழகத்தின் லட்சணம், ஏன் முட்டையை டெலிவரி கொடுத்த முக்கிய புள்ளியை கைது செய்யவில்லை ... டெண்டரை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
28-அக்-202122:20:38 IST Report Abuse
Soumya அடடடா இதுக்கு காரணமே நம்பிள் கோமாளி விஞ்ஞானி விடியல் ஆய்வு நடத்தாது தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X