பொது செய்தி

இந்தியா

இந்தியா - ஆசியான் நாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்பெறும்: பிரதமர்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021
Share
Advertisement
புதுடில்லி: ‛‛இந்தியாவிற்கும், ஆசியான் அமைப்பிற்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெறும் எனவும், வருங்காலங்களில் அது தொடரும்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.இந்தியா- ஆசியான் 18 வது உச்சி மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: கோவிட் காரணமாக நாம் பல சவால்களை சந்தித்தோம். இந்த சவாலான நேரத்தில், இந்தியா ஆசியான் நட்புறவுக்கு சோதனை காலமாக அமைந்தது.
இந்தியா,ஆசியான்,உறவு,பிரதமர்

புதுடில்லி: ‛‛இந்தியாவிற்கும், ஆசியான் அமைப்பிற்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெறும் எனவும், வருங்காலங்களில் அது தொடரும்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியா- ஆசியான் 18 வது உச்சி மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: கோவிட் காரணமாக நாம் பல சவால்களை சந்தித்தோம். இந்த சவாலான நேரத்தில், இந்தியா ஆசியான் நட்புறவுக்கு சோதனை காலமாக அமைந்தது. இந்தியாவிற்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையே உள்ள பரஸ்பர உறவு மேலும் வலுப்பெறும். எதிர்காலத்திலும் தொடரும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியா- ஆசியான் இடையே துடிப்பான உறவு உள்ளதற்கு சாட்சியாக வரலாறு உள்ளது. ஆசியான் நாடுகளின் ஒத்துழைப்பு இந்தியாவுக்கு முக்கியமானது. மரபுகள், பாரம்பரியம், மொழிகள், நூல்கள், கட்டடக்கலை, உணவு உள்ளிட்டவற்றில் இந்தியாவும், ஆசியான் நாடுகளும் பல அம்சங்களை பகிர்ந்து கொள்கின்றன.


latest tamil news



இந்தியா - ஆசியான் கூட்டணி, 2022ல் 30 ஆண்டு நிறைவு செய்கிறது. அதேநேரத்தில் இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும். இதனை, இந்தியா- ஆசியான் நட்புணர்வு ஆண்டாக கொண்டாடுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X