சிங்கப்பூரில் சில மணிநேரத்தில் அதிகரித்த கொரோனா..!

Added : அக் 28, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று (அக்.,28 ம் தேதி) காலைமுதல் திடீரென கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. சில மணி நேரங்களிலேயே 5,324 பேர் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது அந்நாட்டு சுகாதார துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.கொரோனாவின் டெல்டா ரகம் தற்போது சீனா மற்றும் இதர தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. முன்னதாக சீனாவில் வைரஸ் தாக்கம் அதிகரித்ததால்
singapore, covid, சிங்கப்பூர், கோவிட்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று (அக்.,28 ம் தேதி) காலைமுதல் திடீரென கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. சில மணி நேரங்களிலேயே 5,324 பேர் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது அந்நாட்டு சுகாதார துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கொரோனாவின் டெல்டா ரகம் தற்போது சீனா மற்றும் இதர தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. முன்னதாக சீனாவில் வைரஸ் தாக்கம் அதிகரித்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பல மாகாண எல்லைகள் மூடப்பட்டன.

இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள வேற்று நாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் விடுதிகளில் வைரஸ் தாக்கம் அதிவேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சில மணி நேரங்களிலேயே 5,324 பேர் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுள் 66 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 76 பேர் மிதமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.


latest tamil newsமுன்னதாக சிங்கப்பூர் அரசு வைரஸ் தாக்கம் குறைந்ததால் மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்குள் வெளிநாட்டு பயணிகளை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதித்து வந்தது. ஆனால், தற்போது திடீரென வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-அக்-202102:21:49 IST Report Abuse
Natarajan Ramanathan சீனா மாதிரிதான் சிங்கப்பூரும். அரசு சொல்வது மட்டுமே வெளியே வரும். பெரும்பாலும் பொய் தகவல்கள்தான்....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-அக்-202122:52:30 IST Report Abuse
Ramesh Sargam இப்பத்தான் ஏதோ வைரஸ் தாக்கம் குறைந்தமாதிரி ஆனது. மக்களின் அலட்சியத்தால் வைரஸ் தாக்கம் சிங்கப்பூர் மற்றும் ரஷ்யாவில் அதிகரித்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில். அலட்சியம் தொடர்ந்தால் உலகில் மூன்றாம் அலை நிச்சயம்.
Rate this:
Cancel
Pavithra - சென்னை ,இந்தியா
28-அக்-202122:39:02 IST Report Abuse
Pavithra In our government should be reconsider to re 1st to 5 th std. Because they are children's. They know the rules but they do not follow that rules. How is possible to use wash room each one seperately. Or we arr also facing the same of this news
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X