ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,159 பேர் பலியாகி உள்ளனர்.ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,159 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் 85 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா
ரஷ்யா, 40 ஆயிரம் பேர், கொரோனா பாதிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,159 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,159 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் 85 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முதலாகத் தடுப்பூசியை அறிமுகம் செய்த நாடு ரஷ்யா. ஆனால், ரஷ்யாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் மட்டுமல்லாது உள்நாட்டிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட சிலர், இரண்டாவது தவணை தடுப்பூசி போட முடியாமல் காத்திருக்கின்றனர்.

பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தபோதிலும் ரஷ்யாவில் கொரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் முதல்கட்டமாக அடுத்த 11 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அவசியமின்றி வெளியே நடமாடவும், பயணம் செய்யவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-அக்-202122:49:34 IST Report Abuse
Ramesh Sargam மக்கள் எச்சரிக்கையாக இருக்காவிட்டால், மூன்றாம் அலை நிச்சயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X