சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

டீசல் ஜெனரேட்டருக்கு மாற்று குட்டி அணு உலை!

Added : அக் 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
அணு உலைகள் பிரமாண்டமானவையாக இருக்க வேண்டியதில்லை. சிறு மற்றும் குறு அணு உலைகள் பாதுகாப்பானவை; மலிவானவை. இப்படிச் சொல்கிறது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ரேடியன்ட் நிறுவனம்.ஒரு மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணு உலைகளை, பிரமாண்டமான டீசல் ஜெனரேட்டர்களுக்கு பதிலாக விற்பனை செய்ய ரேடியன்ட் திட்டமிடுகிறது.சிறு, குறு அணு உலைகளை, கடலில் மிதக்கும்
டீசல் ஜெனரேட்டருக்கு மாற்று குட்டி அணு உலை!

அணு உலைகள் பிரமாண்டமானவையாக இருக்க வேண்டியதில்லை. சிறு மற்றும் குறு அணு உலைகள் பாதுகாப்பானவை; மலிவானவை. இப்படிச் சொல்கிறது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ரேடியன்ட் நிறுவனம்.

ஒரு மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணு உலைகளை, பிரமாண்டமான டீசல் ஜெனரேட்டர்களுக்கு பதிலாக விற்பனை செய்ய ரேடியன்ட் திட்டமிடுகிறது.சிறு, குறு அணு உலைகளை, கடலில் மிதக்கும் நிலையமாகவும், எங்கும் எடுத்துச் செல்லும் நிலையமாகவும் வடிவமைக்க முடியும் என, ரேடியன்ட் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பேரிடர் நிகழ்ந்த இடங்கள் மற்றும் மின் வசதி எட்டாத, தொழிற்பேட்டைகள் மற்றும் ஊர்களை ரேடியன்ட் இலக்கு வைத்துள்ளது.

ராணுவ தளங்களுக்கும் சிறு அணு உலைகள் தோதாக இருக்கும் என்கிறது ரேடியன்ட். காரணம், பெரும்பாலான ராணுவ தளங்கள் டீசல் ஜெனரேட்டர்களை நம்பியே இயங்குகின்றன.எனவே, அவற்றுக்கு தொலைதுாரத்திலிருந்து டீசலை டேங்கர் லாரிகளில் எடுத்து வர வேண்டியுள்ளது. சிறு அணு உலை மூலம் மின் உற்பத்தி செய்தால், டீசல் சார்பை முற்றிலும் அகற்றிவிட முடியும். மேலும், வாகனங்களையும் மின் வாகனங்களாக மாற்றினால், அவற்றுக்கான மின்சாரத்தையும் குட்டி அணு உலையே நிறைவு செய்துவிடும்.

வளரும் ராணுவ தளத்திற்கு இரண்டு அல்லது மூன்று குட்டி ரேடியன்ட் அணு உலைகள் போதும். நான்கு முதல் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அணுக்கழிவுகளை பத்திரமாக வேறு இடங்களில் புதைத்து விடலாம் என்கிறது ரேடியன்ட்.

டீசல் தட்டுப்பாடு, டீசல் புகை ஆகியவற்றுக்கு மாற்றாக ரேடியன்ட் அணு உலைகள் உதவக் கூடும். ஆனால், விபத்துகள் நேர்ந்தால் கதிரியக்க ஆபத்தை தடுக்க ரேடியன்ட் என்ன செய்யும் என்பது தெரியவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
03-நவ-202112:33:20 IST Report Abuse
Sivagiri கரெக்ட் - - எதிர்காலத்தில் ஒவ்வொரு கருவியும் ஒரு மைக்ரோ அணு உலையுடன் ( பேட்டரி போல ) வரும் - சிறிய டார்ச் லைட் முதல் , ஏசி , வாஷிங் மெஷின் , கரண்ட் அடுப்பு , பைக் , கார் , ரயில் , பிளைட் , வரை அனைத்துமே ஒரு சிறிய அணு உலையுடன் கொடுத்தால் , அனைத்து கருவிகளும் ஒரு பத்து வருஷத்துக்கு எந்த செலவும் இல்லாமல் ஓட்டி விடலாம் - ( தெருவுக்கு தெரு, சைஸ் வாரியா - அணு உலை விற்க ஆரம்பிச்சிடுவாங்க ) . . .
Rate this:
Cancel
mupaco - Madurai,இந்தியா
30-அக்-202113:02:31 IST Report Abuse
mupaco கடைசி வரி நான் எழுத நினைத்தேன். பாதுகாப்பு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X