ஆர்யன்கானுக்கு ஜாமின்: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (39+ 16)
Share
Advertisement
மும்பை: போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த, 'பாலிவுட்' நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், போதை பொருள் தடுப்பு படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 20 நாட்களாக மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தாக்கல் செய்த
Aaryankhan, MUmbaihighcourt, highcourt, ஆர்யன்கான், மும்பை உயர்நீதிமன்றம், ஜாமின்

மும்பை: போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த, 'பாலிவுட்' நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், போதை பொருள் தடுப்பு படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 20 நாட்களாக மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை, மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. ஆர்யன் கான் தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜரானார். 3வது நாளாக இன்றும் விசாரணை நடந்தது.

ஆர்யன்கானிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படவில்லை. ஏற்கனவே 2 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 'வாட்ஸ் ஆப்' தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு சரியான காரணம் கூறப்படவில்லை என முகுல் ரோஹத்கி வாதாடினார்.


latest tamil news


போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, மும்பை உயர்நீதிமன்றம், ஆர்யன்கான், அவரது நண்பர்கள் அர்பாஸ் மெர்சண்ட், முன்முன் தமேசா ஆகியோருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (39+ 16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
29-அக்-202112:08:57 IST Report Abuse
 rajan உடுங்கப்பா பாவம். பாத்தா சின்னப்பையன் விடலை மாதிரி இருக்கான். சொகுசா வளர்ந்தவன இப்படி ஜெயிலில் போட்டு துன்பப்படச் செய்வதா.
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
29-அக்-202111:32:56 IST Report Abuse
Raman இது அநீதி.. ஒரு மார்க்கன் எப்படி தப்பலாம்.. இதுவே நம்ம அதானி ஒரு கண்டைனர் முழுவதும் போதைப்பொருள் கத்தினாலும். கேட்க கூடாது ஹி ஹி ஹி
Rate this:
Cancel
nizamudin - trichy,இந்தியா
29-அக்-202110:49:42 IST Report Abuse
nizamudin அமீர் கான் நீங்கள் வரிசையில் உள்ளீர்கள் தயவு செய்து காத்திருக்கவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X