கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: கனகராஜ் சகோதரருக்கு 5 நாள் போலீஸ் காவல்

Added : அக் 28, 2021
Share
Advertisement
ஊட்டி: சாட்சியங்களை கலைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட, ஜெயலலிதா முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சகோதரர் தனபாலை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த ஊட்டி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.கோடநாடு வழக்கில் சாலை விபத்தில் பலியான கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கடந்த அக்., 25ம் தேதி சேலத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கூடலூர் கிளை சிறையில்
கோடநாடு வழக்கு: கனகராஜ் சகோதரருக்கு 5 நாள் போலீஸ் காவல்

ஊட்டி: சாட்சியங்களை கலைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட, ஜெயலலிதா முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சகோதரர் தனபாலை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த ஊட்டி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கோடநாடு வழக்கில் சாலை விபத்தில் பலியான கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கடந்த அக்., 25ம் தேதி சேலத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கூடலூர் கிளை சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு, இன்று மாலை விசாரணைக்கு வந்தது. இதில், கைது செய்யப்பட்ட இருவரில் தனபாலை மட்டும் நேற்று தனிப்படை போலீசார் கஸ்டடிக்கு கால அவகாசம் கேட்க கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தனபாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அரசு தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.ஆனால், தனபாலை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X