பொது செய்தி

தமிழ்நாடு

கரூர்: இயற்கை விவசாயத்தில், பாரம்பரிய நெல்லை, நேரடி நெல் விதைப்பு முறையை முன்னெடுக்கும் விவசாயி

Added : அக் 28, 2021
Share
Advertisement
கரூர்:கரூர் அடுத்த செல்லாண்டிபாளையத்தை அடுத்து உள்ளது சுக்காலியூர். இந்த கிராமத்தில் வசிப்பவர் சிவக்குமார் (வயது 52). பொறியாளரான இவர், இப்பகுதியின் அருகே இருந்து வரும் ஒரு தனியார் கலைக்கல்லூரியின் தளாளராக இருந்து வந்தார். முதுகலை பட்டதாரியான எம்.இ கட்டுமானப்பொறியாளரான இவர் தற்போது முற்றிலும் முழு நேர இயற்கை விவசாயத்திற்கு மாறியதோடு, கால்நடைகளையும் வளர்த்து
 கரூர்: இயற்கை விவசாயத்தில், பாரம்பரிய நெல்லை, நேரடி நெல் விதைப்பு முறையை முன்னெடுக்கும் விவசாயி

கரூர்:கரூர் அடுத்த செல்லாண்டிபாளையத்தை அடுத்து உள்ளது சுக்காலியூர். இந்த கிராமத்தில் வசிப்பவர் சிவக்குமார் (வயது 52). பொறியாளரான இவர், இப்பகுதியின் அருகே இருந்து வரும் ஒரு தனியார் கலைக்கல்லூரியின் தளாளராக இருந்து வந்தார்.

முதுகலை பட்டதாரியான எம்.இ கட்டுமானப்பொறியாளரான இவர் தற்போது முற்றிலும் முழு நேர இயற்கை விவசாயத்திற்கு மாறியதோடு, கால்நடைகளையும் வளர்த்து வருகின்றார். நாட்டு மாடுகள் மற்றும் ஆடு, கோழிகளை வளர்த்து வரும் இவரது விவசாய நிலம் ஆனது. அமராவதி ஆற்றின் தென்புறம் அமைந்துள்ளதால் தண்ணீர் பிரச்சினை இல்லை, இதுமட்டுமில்லாமல் முழுக்க, முழுக்க இயற்கை இடுபொருட்கள் மற்றும் இயற்கையான பூச்சி விரட்டிகள் என்று கடந்த 2 ஆண்டுகளாக முழு நேர இயற்கை முறை விவசாய சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு அப்பகுதி விவசாயிகள் தயாராகி வரும் நிலையில். இவரும் இவரது வயலில் யுள்ள நிலையில் இவரும் தனது நிலத்தை நெல் நடவு செய்ய தயார் செய்து வைத்தார். அருகில் உள்ள வயல்களில் விவசாய தொழிலாளர்களை கொண்டு நடவு நடுதல், ஆள் பற்றாக்குறையை போக்க பலரும், நெல் நடவுக்கு இயந்திரத்தை பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஐ.ஆர். 20, ஆந்திரா பொன்னி போன்ற ரக நெல்லை பலரும் அரசு விதை நெல் விற்பனை நிலையத்தில் வாங்கி நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொறியாளரான சிவக்குமார். தனது விவசாய நிலத்தில் வழக்கமாக தாள் அடிக்க கொழுஞ்சி செடி வளர்த்து அதை டிராக்டர் கொண்டு உழுது நிலத்தை தயார் செய்வது வழக்கம். ஆனால், இவர் தனது நிலத்தில் பல பயிர் நடவு செய்து அதை டிராக்டர் மூலம் தாள் அடித்து நிலத்தை தயார் செய்து வைத்திருந்தார். தனக்கு இருக்கின்ற நிலத்தில் தமிழர்களின் பாரம்பரிய நெல் விதைகளான கருப்புக்கவனி, கருத்தக்கார், குள்ளக்கார், மாப்பிள்ளை சாம்பா போன்ற விதை நெல்களை வாங்கி நடவு பணிகளை மேற்கொண்டுள்ளர். விதைப்பையும், இயந்திரங்கள், விவச தொழிலார்களை கொண்டு நடவு செய்யாமல் விலை மலிவான கை இயந்திரத்தை பயன்படுத்தி நடவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

வழக்கமாக நெல் விதைகளை வாங்கி நட்டு, அவை ஓரளவு வளர்ந்த பிறகு அவற்றை பிடுங்கி இடைவெளி விட்டு நடுவது என்பது வழக்கமான ஒன்று. ஆனால், இவர் வைத்திருக்கும் கை இயந்திரம் மூலம் விதை நெல்களை போட்டு, அந்த கை இயந்திரத்தை இழுத்துச் செல்லும் போது சரியான இடைவெளியில் நெல்லானது சேற்றில் விழுகிறது. அவை ஒரு சில நாட்களில் தானாக வளர்ந்து விடும் என்கின்றனர்.

வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 30 கிலோ வரை விதை நெல்லை வாங்கி அவற்றை நாற்றாக்கி, எடுத்து நடவு செய்து, தொழிலாளர்களுக்கு செலவு என்பது 5 ரூபாய் வரை செலவு ஆகிறது. ஆனால், இந்த இயந்திரத்தை 6000 ரூபாய்க்கு ஒரு முறை வாங்கினாலே போதும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஏக்கருக்கு 10 கிலோ விதை நெல் இருந்தாலே போதும் என்கின்ற நிலை உள்ளது. இதனால் ஏக்கருக்கு 7000 ரூபாய் வரை பணம் மிச்சமாகிறது. விவசாய பணியாளர்கள் இல்லை என்கின்ற நிலை இருக்காது.

ஒரு ஆள் இருந்தாலே 500 ரூபாய் கூலியில் நடவு பணிகளை முடித்து விடலாம் என்கின்றார் சிவக்குமார். இது போன்று நடவு செய்யப்படும் போது 25 செண்டி மீட்டர் இடைவெளி கிடைக்கிறது. இதனால் சூரிய ஒளி நாற்றின் அடிப் பகுதி வரை கிடைப்பதால் நாற்றும் நன்றாக வளர்வதுடன் மகசூலும் அதிகளவில் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். இவரின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட சக விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் ஆர்வமுடன் பார்ப்பதுடன், கை இயந்திரத்தை இளைஞர்கள் முதல் பெண்கள் வரை சோதித்து பார்கின்றனர். சக விவசாயிகளும் இயற்கை முறை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர் என்றார். இவருக்கு உறுதுணையாக இவரது மனைவி ராஜேஸ்வரி, இவரும் பட்டதாரி ஆவார்.

இந்நிலையில், முழுக்க முழுக்க பொறியாளர் சிவக்குமாரின் விவசாயத்திற்கு இயற்கை இடுபொருட்களை தயாரித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவரை போன்ற படித்த பட்டதாரிகள் அதுவும் உழவுத்தொழிலுக்கு வயது தடையில்லை என்று நினைத்தால் ஒவ்வொருவரும் இயற்கை விவசாயிகளே, இதுமட்டுமில்லாமல், இவர் ஊர்க்காவல்படையில் திருச்சி உதவி சரக தளபதியாக சேவையில் உள்ளார்.

இதுமட்டுமில்லாமல், ஊர்க்காவல்படையில் 13 வருடங்களாக தொடர்ந்து சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவருடைய இயற்கை விவசாயத்திற்கு முற்றிலும் உறுதுணையாக இருப்பது இவரது மனைவி ராஜேஸ்வரி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. உழவுத்தொழிலில் புதிய தொழில்நுட்பம் வாய்ந்த மருந்து தெளிப்பான்களும், டிராக்டரில் உயரிய தொழில்நுட்பம் பயன்படுத்தி உழவுத்தொழில் புரிவது ஒரு வித்யாச முயற்சி ஆகும்


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X