ராஜஸ்தானில் அரசு தேர்வு மையத்தில் பெண் தேர்வர்களுக்கு அவமரியாதை: தேசிய மகளிர் கமிஷன் நோட்டீஸ்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
பிகானூர்: ராஜஸ்தானில் அரசு தேர்வு மையத்தில் பெண்களின் முழுக்கை சட்டைகள் வெட்டி எடுக்கப்பட்டு அவமதிப்பு நடந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் கமிஷன் ராஜஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ராஜஸ்தானில் மாநில அரசு ஊழியர் தேர்வுகளுக்கான முதல் கட்ட போட்டித் தேர்வு (அக்.27) நடந்தது.இதில் பிகானிர் தேர்வு மையத்தில் பெண் தேர்வரின் மேல்சட்டையின் கைப்பகுதியை பெண் போலீஸ்
 ராஜஸ்தானில் அரசு தேர்வு மையத்தில் பெண் தேர்வர்களுக்கு அவமரியாதை: தேசிய மகளிர்  கமிஷன் நோட்டீஸ்

பிகானூர்: ராஜஸ்தானில் அரசு தேர்வு மையத்தில் பெண்களின் முழுக்கை சட்டைகள் வெட்டி எடுக்கப்பட்டு அவமதிப்பு நடந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் கமிஷன் ராஜஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தானில் மாநில அரசு ஊழியர் தேர்வுகளுக்கான முதல் கட்ட போட்டித் தேர்வு (அக்.27) நடந்தது.இதில் பிகானிர் தேர்வு மையத்தில் பெண் தேர்வரின் மேல்சட்டையின் கைப்பகுதியை பெண் போலீஸ் ஒருவர் கத்திரிகோலால் வெட்டி எடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சில தேர்வு மையங்களில் ஆண் காவலர்கள் பெண் தேர்வுகளின் மேல்சட்டையின் கைப்பகுதியை வெட்டும் படமும் நாளிதழ்களில் வெளியானது.


latest tamil news



அதே போன்று முழுக்கை சட்டை அணிந்த ஆண் தேர்வர்களின் முழுக்கை சட்டையை கழற்ற சொல்லி அரை கையாக வெட்டிய பின் தேர்வு எழுத தேர்வுக்கூடத்திற்குள் அனுமதித்தனர்.

தேர்வு எழுத வந்த பெண் தேர்வர்களை இது போன்று மோசமாக நடத்தியது முற்றிலும் அவமானகரமானது. பெண்களுக்கு நேர்ந்த வெட்கக்கேடான சம்பவம் என சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்தன.

இதையடுத்து தேசிய மகளிர் கமிஷன் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து ராஜஸ்தான் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் குமார் ஆர்யாவுக்கு விளக்கம் கேட்டு இன்று (அக். 28) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-அக்-202102:51:13 IST Report Abuse
Thakshaan Thakshaan Please don't repeat the same comment
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-அக்-202102:05:21 IST Report Abuse
Natarajan Ramanathan Hall ticketல் முழுக்கை சட்டை அணிய தடை இருந்தால் வெட்டியது எப்படி தவறாகும்? (ஆண்களுக்கு வெட்டியது அவமரியாதை இல்லையா?)
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-அக்-202102:01:55 IST Report Abuse
Natarajan Ramanathan தோள்பட்டை பகுதியில் அசிங்கமாக மிகப்பெரிய ஓட்டை வைத்து இவள் சட்டை போடலாம். ஆனால் முழங்கை பகுதியில் வெட்டினால் அது அவமரியாதையா? நீட் தேர்வில்கூட முழுக்கை சட்டை அணிய தடைஉண்டு. அதுமாதிரி இங்கும்இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X