சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

'பூச்சாண்டி காட்டுகிறார்!'

Added : அக் 28, 2021 | கருத்துகள் (3)
Advertisement
'பூச்சாண்டி காட்டுகிறார்!' 'என்னங்க இது, அநியாயமாக இருக்கு; எதற்கு திரைமறைவில் செயல்பட வேண்டும். வெளிப்படையாக தலைவர் பதவியை ஏற்க வேண்டியது தானே...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுலின் நடவடிக்கைகளைப் பார்த்து முணு முணுக்கின்றனர், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள். காங்கிரசில் கடந்த சில மாதங்களாகவே மூத்த தலைவர்களுக்கும், சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கும் இடையேயான


அக்கம் பக்கம்


'பூச்சாண்டி காட்டுகிறார்!'



'என்னங்க இது, அநியாயமாக இருக்கு; எதற்கு திரைமறைவில் செயல்பட வேண்டும். வெளிப்படையாக தலைவர் பதவியை ஏற்க வேண்டியது தானே...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுலின் நடவடிக்கைகளைப் பார்த்து முணு முணுக்கின்றனர், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள்.
காங்கிரசில் கடந்த சில மாதங்களாகவே மூத்த தலைவர்களுக்கும், சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கும் இடையேயான மோதல், விஸ்வரூபம் எடுத்துள்ளது. கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 23 பேர், 'சோனியா, கட்சியின் தற்காலிக தலைவராக நீடிப்பது சரியல்ல; கட்சிக்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்பட வேண்டும்' என, போர்க்கொடி துாக்கி வருகின்றனர். ஆனால் கட்சி மேலிடமோ, ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி, இவர்களது கோரிக்கையை தட்டி கழிக்கிறது. சமீபத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய ராகுல், 'கட்சிக்குள் உள்ள பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டால், தலைவர் பதவியை ஏற்க தயார்' என, ஆவேசமாக பேசினார்.
சோனியாவோ, 'நான் தற்காலிக தலைவர் இல்லை. உட்கட்சி தேர்தல் நடந்து முடியும் வரை, நான் தான் முழு நேர தலைவர்' என்றார். இதைக் கேட்ட மூத்த தலைவர்கள், 'கட்சி தொடர்பான எல்லா முடிவுகளையும் ராகுல் தான் எடுக்கிறார். அப்புறம் எதற்கு நிழல் தலைவராக அவர் செயல்பட வேண்டும். நிரந்தரமாக தலைவர் பதவியை ஏற்க வேண்டியது தானே. சோனியாவுக்கு பின் நின்று, எதற்கு பூச்சாண்டி காட்டுகிறார்' என, காட்டமாக கேள்வி
எழுப்புகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
29-அக்-202116:17:08 IST Report Abuse
r.sundaram விஷயம் தெரியாமல் பேசுகிறார்கள்.மனதளவில் ராகுல் ஒரு பயந்தான்கொள்ளி போலிருக்கிறது. தலைமை பதவி வேண்டாம், அனால் தலைமையின் அதிகாரம் மட்டும் வேண்டும். இதையே அவர் விரும்புகிறார். பொறுப்பு ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஆனால் அதிகாரம் வேண்டும். இதுவரை இரண்டு மாநிலங்களில் முதலமைச்சர் தேர்வில் அவரது கருத்து வேண்டும் அல்லது அவர் என்ன நினைக்கிறார் என்பது தெரிய வேண்டும், அல்லது அவரது உத்தரவு வேண்டும் என்ற அளவில், அவரை சம்பத்தப்பட்ட இடத்திலேயே காணோம். சம்பவ இடத்தில் இல்லாமல் வேறு எங்கோ சென்று விட்டார். பொறுப்பை தட்டிக்கழிக்க இதுமாதிரி செய்கிறார். ஆதலால் தலைமை பதவிக்கு இவர் வந்தாலும் மாற்றம் ஒன்றும் வரப்போவது இல்லை.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
29-அக்-202115:47:30 IST Report Abuse
raja இதைத்தான் வீரமணி அவர்கள் பூனை குட்டி வெளியில் வந்ததுன்னு தலையங்கம் கொடுப்பாரு .......
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
29-அக்-202113:46:31 IST Report Abuse
Suppan 'கட்சிக்குள் உள்ள பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டால், தலைவர் பதவியை ஏற்க தயார்' ராகுல் ஜி என்னவொரு "அறிவுபூர்வமான" பேச்சு அப்படித் தீர்க்கப்பட்டால் தலைவரே தேவையில்லையே கட்சி பிரச்சினையே இல்லாமல் வளரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X