பொது செய்தி

தமிழ்நாடு

திடீர் உடல்நலக் குறைவு: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் 'அட்மிட்'

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், (71), நேற்றிரவு (அக்.,28) திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நடிகர் ரஜினியின் திரையுலக சேவையை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான, 'தாதா சாஹேப் பால்கே' விருதை அறிவித்தது. கடந்த 25ம் தேதி டில்லியில் நடந்த விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதை வழங்கி கவுரவித்தார். அதன்பின்,

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், (71), நேற்றிரவு (அக்.,28) திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.latest tamil newsநடிகர் ரஜினியின் திரையுலக சேவையை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான, 'தாதா சாஹேப் பால்கே' விருதை அறிவித்தது. கடந்த 25ம் தேதி டில்லியில் நடந்த விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதை வழங்கி கவுரவித்தார். அதன்பின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை ரஜினி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

டில்லி பயணத்தை முடித்து, ரஜினி நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். இந்நிலையில், நேற்று இரவு 8:30 மணி அளவில், திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தகவல், ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


latest tamil news'முழு உடல் பரிசோதனைக்காக, ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நலமுடன் உள்ளார். இன்று வீடு திரும்புவார்' என, அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரம், ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைபட்டதாகவும்; ஏற்கனவே மாற்றப்பட்ட சிறுநீரகத்தின் செயல் திறன் திடீரென குறைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இருப்பினும், மருத்துவமனை தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
29-அக்-202112:48:06 IST Report Abuse
Dhurvesh ஒரு வேலை கேடிஜி மிரட்டி அனுப்பி இருப்பாரா , எதற்கு பாலிசாஹீப் தெரியும பிஜேபி யை வளர்க்க தான் என்று சொல்லி இருப்பரோ
Rate this:
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
29-அக்-202114:27:34 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஅதிமுக மீதான சலிப்பால் ஆட்சிக்கு வந்த டீம்காவுக்கே ரஜினி தேவையில்லை எனும்போது ஒட்டு மொத்த மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்ட பிஜேபிக்கு எதுக்கு இவன் சப்போர்ட்டு? ஆர்யன் கான் உனக்கும் ஏதாவது சரக்கு குடுத்துட்டானா? அதை சாப்பிட்டுத்தான் எழுதுரியா ?...
Rate this:
Cancel
Bairav Kumar - Chennai,இந்தியா
29-அக்-202111:49:21 IST Report Abuse
Bairav Kumar ரஜினியின் இரண்டாவது மகள். திருமணம் செய்திருப்பது. திமுக ஸ்டாலின் உறவினர் மகன் என்பது பல பேர்களுக்கு தெரியாது. தமிழகத்தில் திராவிட ஆட்சிக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் கொடுப்பார் என நினைத்த மக்களுக்கு உடல் நிலை என்ற மாயையை சொல்லி திமுகவுடன் சேர்ந்து அல்வா கொடுத்தவர். வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு திமுகவுக்கு ஆதரவாகவும் மோடி அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என திமுக சம்பந்தி வீட்டார் வேண்டுகோள் விடுத்ததாகவும் அதை ரஜினி ஏற்று ஓகே சொல்லிவிட்டதாகவும் போயஸ் வட்டாரங்கள் கூறுகிறது. இனி சூர்யா, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், சித்தார்த் , ஓவியா வரிசையில் ரஜினியின் குரலும் மோடிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும். ஜெய் திராவிட ஜக்கம்மா.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
29-அக்-202112:54:59 IST Report Abuse
Dhurvesh, வோட்டு போடுவது மக்கள் அவர்களுக்கு தெரியும் உங்கள் நிலையை பற்றி அப்புறம் என்ன ,...
Rate this:
Cancel
நல்லவன் - chennai,இந்தியா
29-அக்-202107:43:37 IST Report Abuse
நல்லவன் வழக்கமா, பின்வாசல் வழியா ஆசிர்வாதம் வாங்கிட்டு, ஆளும்கட்சிக்கு எதிரா யதாவது அறிக்கை விட்டுட்டு விளம்பரம் தேடுவாறு. சமீப காலமாக இந்தமாதிரியான விளம்பரம் - மத்திய அரசு விரைவில் இவருக்கு நோபல் பரிசுகூட அறிவிச்சா ஆசிரியப்படுறதுக்கு ஒன்னும்மில்ல.. பாவம் இவரோட உண்மையான அப்பாவி ரசிகர்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X