எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

சசிகலா விவகாரத்தில் முடிவு மா.செ.,க்கள் வேண்டுகோள்

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் - பழனிசாமி இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியினர் இரு பிரிவாக மோதிக் கொள்ளும் சூழல் உருவாக்கி உள்ளது. அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே, சசிகலா விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.சசிகலாவை சேர்க்கவே கூடாது என்பதில், பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் உறுதியாக
சசிகலா விவகாரம், முடிவு மா.செ.,க்கள்

அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் - பழனிசாமி இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியினர் இரு பிரிவாக மோதிக் கொள்ளும் சூழல் உருவாக்கி உள்ளது.

அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே, சசிகலா விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.சசிகலாவை சேர்க்கவே கூடாது என்பதில், பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் உறுதியாக உள்ளனர்.


விவாதம்

அதே நேரத்தில், பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும், தலைமை நிர்வாகிகள் அல்லது பொதுக்குழு கூடி விவாதித்து, இதில் முடிவெடுக்க லாம் என்று கூறுகின்றனர். இதன் காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும், அ.தி.மு.க.,வினரின், 'வாட்ஸ் ஆப்' குழுவில், இருவரின் நிலைப்பாடு தொடர்பாக, கடும் விவாதம் நடந்து வருகிறது.கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களில், பழனிசாமிக்கு ஆதரவாகவும், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், அதிகம் பேர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதனால், கட்சியினரிடம் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள மாவட்ட செயலர்கள் பாலகங்கா, விருகை ரவி, சத்யா, ராஜேஷ், வெங்கடேஷ்பாபு ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதன்பின், அவர்கள் அளித்த பேட்டி: அ.தி.மு.க., தலைவர் களாக உள்ள, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கட்சியை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

கடுமையான சோதனையான காலத்தில், சட்டசபை தேர்தலை சந்தித்தோம். தோல்வி அடைந்தாலும், கவுரவமான வெற்றியை பெற்றோம்.


தவிர்த்தல்

இந்நிலையில், பன்னீர்செல்வத்திடம், பத்திரிகையாளர்கள் சசிகலா குறித்து கேட்டபோது, 'கட்சி தலைமை கழகத்தில் பேசி முடிவெடுத்து கொள்வோம்' எனக் கூறி உள்ளார். அதற்கு பல்வேறு யூகங்கள் கொடுத்து, கட்சியில் சிலர் பேசுகின்றனர். ஊடகங்களில் பேட்டி அளிக்கின்றனர்.

பன்னீர்செல்வமும், பழனிசாமியும் கட்சியை செம்மையாக நடத்தி வரும் நிலையில், பிரச்னையை அவர்களிடம் விட்டு விடுவோம். அவர்கள் தக்க முடிவு எடுப்பர். கீழே இருப்போர் அனைவரும், அவர்கள் எடுக்கும் முடிவை கேட்டு செயல்படுவோம். ஆளாளுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
29-அக்-202115:26:21 IST Report Abuse
Rengaraj கோஷ்டி சண்டை இல்லாத கட்சி எது? எனவே அதை பொருட்படுத்த வேண்டாம். இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் ஈகோ பார்க்காமல் ஈ .பி. எஸ், ஓ.பி.எஸ் இருதலைவர்களும் சேர்ந்தே சென்று மாவட்டம் தோறும் அணைத்து தொண்டர்களையும் நேருக்கு நேர் சந்தித்து கட்சி தொண்டர்களை சோர்ந்து போகாமல் இருக்க வேண்டும் என்று ஊக்குவிக்க வேண்டும். தோல்விக்கான காரணத்தை ஆராயாமல் கட்சியின் தற்போதைய பலத்தை நாடி பிடுத்து பார்க்க தங்கள் அனுபவத்தை பயன்படுத்தவேண்டும். கட்சியின் அடிமட்டம் வரை தங்கள் செல்வாக்கு எவ்வாறு உள்ளது என்றும் தெரிந்து கொள்ள உதவும். அப்படி செய்தால் அதுவே எதிர்கட்சியினருக்கு ஒரு கலக்கத்தை உண்டாக்கும். ஊடகங்களுக்கு தீனி கிடைக்காமல் போகும். ஸ்லீப்பர் செல்களை அடையாளம் கண்டுகொள்ள உதவியாக இருக்கும். அதை இருவரும் செய்யவேண்டும். அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிரச்சாரத்தை தொடங்கியது மாதிரியும் இருக்கும். உண்மை தொண்டர்கள் எவரும் கட்சியின் நலனே முக்கியம் என்று சொல்வார்கள். பொதுக்குழு, செயற்குழு இவை எல்லாம் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.
Rate this:
Cancel
K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா
29-அக்-202110:40:36 IST Report Abuse
K.SANTHANAM கட்சியை அடகு வைக்காமல் இருந்தால் சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X