'மாஜி' அதிகாரிக்கு ஜாமினில் வெளிவர முடியாத கைது 'வாரன்ட்'

Updated : அக் 28, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தானே :பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங்குக்கு எதிராக, தானே நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத கைது 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தெற்கு மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே பிப்.,ல்
 'மாஜி' அதிகாரிக்கு 'பிடிவாரன்ட்'

தானே :பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங்குக்கு எதிராக, தானே நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத கைது 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தெற்கு மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே பிப்.,ல் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் நின்றிருந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங்கை பணியிட மாற்றம் செய்து, மாநில அரசு உத்தரவிட்டது.


latest tamil news



இதன்பின் பரம்வீர் சிங், அப்போது மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் மீது ௧௦௦ கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். அது முதல், பரம்வீர் சிங் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
தானேயைச் சேர்ந்த கட்டுமான நிபுணர் கேத்தன் தன்னா அளித்த புகாரில், 'பரம்வீர் சிங், மும்பை கமிஷனராக இருந்த போது என்னிடம் 1.25 கோடி ரூாபாய் கேட்டு மிரட்டினார்' என, தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில்பரம் வீர் உட்பட 28 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பரம் வீர் சிங் தொடர்பான வழக்கு ஒன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, 'அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை' என, மஹாராஷ்டிரா அரசு தெரிவித்தது.

இந்நிலையில் 1.25 கோடி பணம் கேட்டு மிரட்டிய வழக்கு, தானே நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தது. பரம்வீர் சிங்குக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்து, தானே நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
29-அக்-202108:21:36 IST Report Abuse
VENKATASUBRAMANIAN மல்லையா நீரவ் மோடி நாட்டை விட்டு ஓடியப்போது கூவினவர்கள் இப்போது வாயே திறக்க வில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X