காங்.,கை 'கழற்றி' விட்டு பா.ஜ.,வுடன் கூட்டணி? மெகா திட்டம்?

Updated : அக் 29, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (123)
Advertisement
புதுடில்லி :காங்கிரசை 'கழற்றி' விட்டு, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கும் மெகா திட்டம், தி.மு.க., தரப்பில் தயாராகி வருவதாக டில்லி வட்டாரத்தில் கூறப்படுகிறது. மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்லவும், தமிழகத்திற்கு தேவையான நிதியைப் பெறவும், தி.மு.க., தரப்பில் இம்முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக, பா.ஜ.,வுக்கு ஆதரவாகவும், காங்கிரசுக்கு எதிராகவும்,
காங்.,கை கழற்றி ,  பா.ஜ.,கூட்டணி மெகா திட்டம்?

புதுடில்லி :காங்கிரசை 'கழற்றி' விட்டு, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கும் மெகா திட்டம், தி.மு.க., தரப்பில் தயாராகி வருவதாக டில்லி வட்டாரத்தில் கூறப்படுகிறது. மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்லவும், தமிழகத்திற்கு தேவையான நிதியைப் பெறவும், தி.மு.க., தரப்பில் இம்முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதற்கு முன்னோட்டமாக, பா.ஜ.,வுக்கு ஆதரவாகவும், காங்கிரசுக்கு எதிராகவும், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பகிரங்கமாக பேசியுள்ளார். அவரது கருத்தால், தமிழகம் மட்டுமல்ல; தேசிய அளவிலும் அரசியல் வானிலை மாறும் வாய்ப்பு உருவாகி உள்ளது.கடந்த ஏப்., மே மாதங்களில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., மற்றும் மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதில், பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகங்கள் முக்கிய பங்கு வகித்தன.தவறான கண்ணோட்டம்அவரை காங்., கட்சியில் சேர்க்க முயற்சிகள் நடந்தன. ஆனால், ராகுலுக்கும், பிரசாந்துக்கும் கருத்து ஒத்துப் போகவில்லை என்பதால், பிரசாந்த் தற்போது திரிணமுல் காங்., உறுப்பினராக உள்ளார்.சமீப காலமாக காங்கிரசை, பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். கோவாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:'பா.ஜ., மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். அதனால், பா.ஜ.,வை துாக்கி எறிந்து விடலாம்' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் தவறான கண்ணோட்டத்தில் உள்ளார். பிரதமர் மோடியை அகற்றிவிட்டால், பா.ஜ.,வை அகற்றி விடலாம் என தப்புக் கணக்கு போடுகிறார்.மோடியை வேண்டுமானால் மக்கள் நிராகரிக்கலாம். ஆனால், பா.ஜ., தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நீடிக்கும். தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், நாட்டின் அரசியலில் முக்கிய மையமாக பா.ஜ., பல தலைமுறைகள் இருக்கும். தேர்தலில், 30 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டு பெறும் கட்சியை, அவ்வளவு சுலபமாக வெளியேற்ற முடியாது.


வெல்ல முடியாதுநாடு சுதந்திரம் அடைந்த பின், 40 ஆண்டுகளுக்கு காங்., எப்படி இருந்ததோ, அதுபோல அடுத்த பல ஆண்டுகளுக்கு பா.ஜ., இருக்கும். பிரதமர் மோடியின் வலிமை என்ன என்பதை ஆராய்ந்து, புரிந்து, அறிவுப்பூர்வமாக யோசிக்க வேண்டும். அதற்கேற்ப வலுவான போட்டியை ஏற்படுத்தாவிட்டால், அவரை வெல்ல முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாந்த் கிஷோரின் பரபரப்பான இந்த பேச்சு, தமிழக அரசியல் வானிலையிலும் மாற்றம் நிகழ்வதற்கான அறிகுறியாகத் தென்படுகிறது.சமீப காலமாக தி.மு.க., அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களை அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர்; மத்திய அரசிடம் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கின்றனர்.

'தி.மு.க., அமைச்சர்களுக்கு, மத்திய அரசின் அமலாக்கத் துறையால் தரும் நெருக்கடிகளை தவிர்க்க வேண்டும்; தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை பெற வேண்டும்' என்பது தற்போதைய கணக்கு.மேலும், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், கடந்த தேர்தலைப் போல வெற்றிவாகை சூட வேண்டும் எனில், பா.ஜ.,வின் எதிர்ப்பு இல்லாமல், சுமுகமாக தேர்தலைச் சந்தித்து, எம்.பி., பதவிகளை அள்ள வேண்டும்.


நெருக்கடிஅகில இந்திய அளவில் காங்கிரசின் செல்வாக்கு அதலபாதாளத்திற்குச் சென்று விட்டதால், இனி மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கச் சாத்தியமில்லை என தி.மு.க., கருதுகிறது.
எனவே, காங்கிரசை 'கழற்றி' விட்டு, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., தயாராகி வருவதாகத் தெரிகிறது.

இது குறித்து,தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய மோசடி வழக்கில், தற்போது தி.மு.க., அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கு, அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அனுப்பி உள்ளது. இந்த நடவடிக்கை, தி.மு.க., அரசுக்கு மத்திய அரசு கொடுக்கிற நெருக்கடியாகக் கருதப்படுகிறது. தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது.

மத்திய அரசு மனம் வைத்தால் தான், தமிழகத்திற்கு தேவையான நிதி தாராளமாக கிடைக்கும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய திட்டங்களை நிறைவேற்ற முடியும். அவற்றை முன்னிலைப்படுத்தி, 10 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் கோலோச்ச முடியும்.தி.மு.க., அமைச்சர்கள் மீது, பா.ஜ., ஊழல் புகார் பட்டியல் கொடுத்தால், அதை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் சிறப்பு அதிகாரம், கவர்னருக்கு தரப்பட்டுள்ளது. அதற்கான புதிய சட்டத் திருத்தத்தை, தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எனவே, அமைச்சர்கள் மீதான புகார்கள் தொடர்பான விசாரணை நெருக்கடியை தவிர்க்க வேண்டிய கட்டாயம், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டு உள்ளது.


கூட்டணி வெற்றிதி.மு.க., தலைமை அதிகார மைய உறுப்பினர் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும், வாரம் இரண்டு முறை டில்லியில் சந்தித்து பேசி, தி.மு.க., - பா.ஜ., இடையே நல்லுறவை வளர்த்து வருகின்றனர்.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரசுக்கு குறைந்த இடங்களை ஒதுக்குவதன் வாயிலாக, அக்கட்சி வெளியேறும் சூழல் உருவாகும் என்பது அறிவாலயக் கணக்கு.லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இடம் பெறும்பட்சத்தில், அக்கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு உள்ளது.

தி.மு.க., கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் கட்சிகள் வெளியேறும். ஆனால், பா.ம.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள் சேரும். அ.தி.மு.க., காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக பிரியும் பட்சத்தில், சிறுபான்மையினர் சமுதாய ஓட்டுகளும் பிரியும். இதனால், தி.மு.க.,வுக்கு பாதிப்பு ஏற்படாது.

அதேசமயம் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு தருவோம் என்ற நம்பிக்கை இருப்பதால், அவர்களின் ஓட்டுகள் அதிகளவில் தி.மு.க.,வுக்கு கிடைக்கும்.தமிழகத்தின் வளர்ச்சிக்காக, குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்து, நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம் என தேர்தல் பிரசாரம் செய்து, தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கான களத்தை தான் பிரசாந்த் கிஷோர் உருவாக்குகிறார் என, டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.


Advertisement
வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
03-நவ-202117:31:58 IST Report Abuse
Venkatakrishnan ஏன் இவ்வளவு பகல் கனவு என்பதுதான் புரியவில்லை....
Rate this:
Cancel
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
02-நவ-202111:01:41 IST Report Abuse
K E MUKUNDARAJAN இதெல்லாம் மதிய அரசுடன் இணக்கமாக செயல் பட்டு நிதி பெற உதவும். இணைவது கூட்டணி என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. மோடி எதிர்ப்பு வாபஸ் பெற்றாலே தமிழக அரசு நல்லபடி நடக்கும். முதலீடு பெருகும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
Rate this:
Cancel
Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ
02-நவ-202106:46:21 IST Report Abuse
Bush கழட்டி விடறது ...என்ன பாஷை ..
Rate this:
Venkatakrishnan - Mumbai,இந்தியா
03-நவ-202117:32:42 IST Report Abuse
Venkatakrishnanராமர் பாஷை......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X