பாக்., வெற்றியை கொண்டாடினால் உ.பி.,யில் தேச துரோக வழக்கு பாயும்

Updated : அக் 30, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (17)
Advertisement
லக்னோ : ''இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பெற்ற வெற்றியை கொண்டாடினால், தேசத் துரோக வழக்கு பாயும்,'' என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் 'டி - 20' உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றது. பெரும்
பாக்., வெற்றி,தேச துரோக வழக்கு,

லக்னோ : ''இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பெற்ற வெற்றியை கொண்டாடினால், தேசத் துரோக வழக்கு பாயும்,'' என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் 'டி - 20' உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றது.



பெரும் சர்ச்சை



இந்த வெற்றியை, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் காஷ்மீரை சேர்ந்த சிலர் கொண்டாடினர்; இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.பாக்., வெற்றியை கொண்டாடிய காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவ மாணவ - மாணவியர் மீது, போலீசார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்திலும், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லுாரியில் படிக்கும் காஷ்மீரை சேர்ந்த மூன்று மாணவர்கள், பாக்., வெற்றியை கொண்டாடியதுடன், இந்தியாவுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பா.ஜ., சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.


மூன்று மாணவர்கள்



இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி கல்லுாரியில் பாக்., வெற்றியை கொண்டாடிய மூன்று மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். அவர்களை கல்லுாரி நிர்வாகம் 'சஸ்பெண்ட்' செய்தது. இவர்களை தவிர, உ.பி.,யில் பாக்., வெற்றியை கொண்டாடிய பரேலியைச் சேர்ந்த மூவரையும், லக்னோவைச் சேர்ந்த ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ''கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுவோர் மீது, தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்படும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
31-அக்-202109:17:44 IST Report Abuse
Vaduvooraan ஹிந்துக்களுக்கு இன்று பரவலாக உள்ளார்ந்த கோபம் கனன்று கொண்டிருக்கிறது. (தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் அதை காட்டாவிட்டாலும் கூட ) அதை உணராத அரசியல் கட்சிகள், சமூக குழுவினர், தனி நபர்கள் என்று யாராக இருந்தாலும் புறக்கணிக்கப்படுவார்கள் என்பது உறுதி
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
29-அக்-202123:25:17 IST Report Abuse
Sivagiri இவரு இப்டி சொல்றாரு . . ஆனா இங்க இன்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அலறின - இதுதான் சப்ஜெக்ட் - கொண்டாட்டம் / அலறல் / கூச்சல் / அறைகூவல் . . , யாராலும் கேள்வி கேட்க முடியாது . .
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
29-அக்-202114:00:04 IST Report Abuse
unmaitamil விளையாட்டில் தனக்கு பிடித்தவர்களின் வெற்றியை கொண்டாடலாம். ஆனால் இந்தியா ஒழிக, எதிரி பக்கிஸ்த்தான் வாழ்க என்று ஊளையிடும்போதுதான் பிரச்சனையை வருகிறது. எந்த முறையிலும் நாட்டுக்கு எதிராக நடந்துகொண்டால் தண்டனை கிடைக்கும் என்கிற பயம் இருக்கவேண்டும். இல்லாவிடில் காசுக்காக நாட்டை எதிரிக்கு காட்டிக்கொடுக்கும் துரோகிகள் எண்ணிக்கை கூடிவிடும். இந்த நாட்டை விரும்பாதவர்கள் தாராளமாக வேறு நாட்டுக்கு போகலாமே. இங்கு இருக்க விரும்பினால் வாழை சுருட்டிக்கிட்டு இருக்க வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X